பிரபல பாலிவுட் நடிகை தன் கணவனுக்கு பொது இடத்தில் "லிப்லாக்"கொடுத்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கணவனுடன் பப்ளிக்காக செய்யும் செயலா இது? படுக்கை அறை எதுக்கு? முகம் சுழிக்க வைத்த விஜய் பட ஹீரோயின்!

ஷில்பா ஷெட்டி பிரபல பாலிவுட் நடிகைகளுள் ஒருவராவார். இவர் நடித்த பல படங்கள் வெற்றியடைந்துள்ளன. இவர் தன் உடல் அழகை பேணிப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையுடையவர். தன்னுடைய யோகா பயிற்சி வீடியோக்களையும், உடற்பயிற்சி வீடியோக்களையும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வார்.
இவர் ஐபிஎல் தொடரின் ஒரு அங்கமான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருந்தார். அதை அணியின் மற்றொரு உரிமையாளரான ராஜ் குந்த்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இருவரும் லண்டனில் தங்களுடைய பொழுதை கழித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் ஹேம்ப்டன் நீதிமன்ற வளாகத்தில் லிப்லாக் முத்தமளித்த போது எடுக்கப்பட்ட புகைப்படமானது சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் "பூமராங்" முறையில் இந்த வீடியோவானது வெளியானது. ஷில்பா ஷெட்டி மஞ்சள் நிற மேலாடையில் ஜொலித்துள்ளார்.
மேலும் வெள்ளை நிற பேண்ட் அணிந்திருந்தார். ராஜ் குந்த்ரா சாதாரணமாக ஜீன்ஸ் பேண்டில் வந்திருந்தார். விஜயுடன் குஷி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஷில்பா ஆடியிருப்பார். என்ன தான் கணவனாக இருந்தாலும் பொது இடத்தில் வைத்தா உதட்டில் முத்தம் கொடுப்பது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.