பிரபல நடிகை சிம்ரன் மர்ம மரணம்! கணவனை கைது செய்தது போலீஸ்!

பிரபல நடிகை சிம்ரன் கொலை வழக்கில் அவரது கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.


ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தின் கொய்ரா மாதா எனும் கிராமத்தில் மகாநதிக்கரையில் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து போலீசார் சென்று அந்த சடலத்தை மீட்டனர். சடலத்தின் முகம், உடல் என பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. இதனை அடுத்து அநத் பெண் சடலத்தை போலீசார் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

   சடலத்தின் அருகே ஒரு ஹேன்ட் பேக் கிடந்துள்ளது. அதனை எடுத்து ஆராய்ந்த போது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் உயிரிழந்து கிடந்தது பிரபல நடிகை சிம்ரன் என்று போலீசாருக்கு தெரியவந்தது. இதனை அடுத்து விசாரணையை விரைவு படுத்திய போலீசார் சிம்ரன் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் வழக்குப் பதிவு செய்து சிம்ரன் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

   சம்பல்பூர் எனும் ஒரே ஒரு பாடல் மூலம் ஒடிசா முழுவதும் பிரபலம் ஆனவர் நடிகை சிம்ரன். இவரது முழுப் பெயர் சிம்ரன் சிங் ஆகும். ரிக்சாவாலா, ரிம்ஜிம், மோர் கேர்ள்பிரன்ட் 2, தில் கா ராஸா ஆகிய படங்களில் சிம்ரன் நடித்துள்ளார். இதனிடையே தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக சிம்ரனின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

   இந்த நிலையில் சிம்ரனின் கணவர் ராஜூவை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தான் தன் மனைவியை கொலை செய்யவில்லை என்று ராஜூ கூறியுள்ளார். குடும்ப பிரச்சனையால் சிம்ரன் தற்கொலை செய்து கொண்டதாக ராஜூ தெரிவித்துள்ளார்.