பிரபல நடிகை ஒருவர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்துள்ளார்.
பா.ஜ.கவில் இணைந்த பிரபல தமிழ் லெஸ்பியன் நடிகை! யார் தெரியுமா?
பிரசாந்துடன் காதல்
கவிதை எனும் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் இஷா கோபிகர். தொடர்ந்து
என் சுவாசக் காற்றே படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்தார் இவர். அதோடு
மட்டும் இல்லாமல் விஜயுடனும் நெஞ்சினிலே படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் இஷா.
நரசிம்மா படத்தில் விஜயகாந்துடன் நடித்த பிறகு
இந்தியில் இஷா கோபிகருக்கு வாய்ப்பு கிடைத்தது. 2004ம் ஆண்டு கேர்ள் பிரண்ட் எனும் படத்தில் ஒரு பெண்ணை காதலித்து அவருடன்
உடலுறவு வைத்துக் கொள்ளும் லெஸ்பியன் கேரக்டரில் துணிச்சலாக இஷா கடிநத்திருப்பார்.
இதனை அடுத்து இந்தியில் முன்னணி
நடிகையாக இஷா கோபிகர் ஒரு ரவுண்ட் வந்தார். ஒரே வருடத்தில் ஏழு இந்திப்படங்களில்
நடித்து முன்னணி நாயகியானார். 2009ம் ஆண்டு திருமணம் செய்து திரையுலகில் இருந்து
ஒதுங்கி இருந்தார்.
தற்போது இந்திப்படங்களில் கவுரவ வேடங்களில்
இஷா கோபிகர் நடித்து வருகிறார். இந்த நிலையில் மும்பையில் போக்குவரத்து துறை
அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் இஷா கோபிகர் பா.ஜ.கவில் இணைந்தார். உடனடியாக
அவருக்கு பா.ஜ.கவின் போக்குவரத்து தொழிலாளர்கள் அணியின் செயல் தலைவர் பொறுப்பு
அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
எல்லாம் சரி தான் ஆனால் இஷா கோபிகர்
தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்கு வருவாரா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. காங்கிரசுக்கு
நக்மா இங்கு வந்து பிரச்சாரம் செய்யும் போது அவருக்கு போட்டியாக இஷா கோபிகர்
வரமாட்டாரா என்ன?