நடுத் தண்டவாளம்! அதிவேகத்தில் ரயில்! மகளை பிடித்துக் கொண்ட தாய்! மகனை பிடித்துக் கொண்ட தந்தை! குரூர மரணம்! திண்டுக்கல் பரிதாபம்!

திண்டுக்கல்லை சேர்ந்த தம்பதியினர் கடன் தொல்லை தாங்க முடியாமல் தங்களது மகள் மற்றும் மகனுடன் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கடன் பிரச்சினையால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் மிகப்பெரிய தொடர்கதையாக நம் தமிழ்நாட்டில் நிலவி வருகிறது. சமீபத்தில் கூட கடன் பிரச்சினை மற்றும் மூன்றாம் எண் லாட்டரி சீட் உபயோகத்தால் ஐந்து பேர்கொண்ட குடும்பமே சயனைட் அருந்தி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சோகம் நிகழ்ந்து மறைவதற்கு உள்ளேயே திண்டுக்கல்லை சேர்ந்த வேறு ஒரு குடும்பம் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கி உள்ளது.

உறையூர் பகுதியில் வசித்து வருபவர்கள் உத்திராபதி மற்றும் சங்கீதா தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 18 வயதில் அபிநயஸ்ரீ என்ற மகளும் பதிமூன்று வயதில் ஆகாஷ் என்ற மகனும் உள்ளனர். உத்திராபதி குடும்பம் தீராத கடன் பிரச்சனையால் தவித்து வந்துள்ளது ஆகையால் இந்த குடும்பம் ஒன்றாக இணைந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளது . 

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வரலாமென கடந்த கார்த்திகை தீபம் அன்று திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலுக்கு சென்றுள்ளனர். சாமி தரிசனம் செய்து விட்டு ரயில் நிலையத்திற்கு சென்று குருவாயூர் எக்ஸ்பிரஸ் ஏரி கொடை ரோடுவே சென்றுள்ளனர் . பின்னர் அங்கிருந்து கொடைக்கானலுக்கு அந்த குடும்பத்தினர் சென்றிருக்கின்றனர்.

கொடைக்கானலுக்கு சென்றவர்கள் சுற்றுலா தளங்கள் அனைத்தையும் நன்றாக சுற்றிப்பார்த்து விட்டு ஹோட்டலுக்கு சென்று வயிறார சாப்பிட்டு இருக்கின்றனர். பின்னர் இரவு 7 மணி அளவில் கொடைரோடுவே ரயில் நிலையத்திற்கு மீண்டும் வந்துள்ளனர். நீண்ட நேரமாக அந்த ரயில் நிலையத்திலேயே அவர்கள் நால்வரும் காத்துக்கொண்டிருந்தனர். பின்னர் சுமார் பதினோரு மணி அளவில் மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் ரயில் வந்து கொண்டிருந்திருக்கிறது.

அதனைப் பார்த்த நால்வரும், மகளின் கையை தாயும் மகனின் கையை தந்தையும் இறுக்கமாக பிடித்துக்கொண்டு அதிவேகமாக வந்த அந்த ரயிலின் முன் ஒரே நேரத்தில் பாய்ந்துள்ளனர். ரயிலின் முன் பாய்ந்து அடுத்த நொடியே நால்வரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் அறிந்து வந்த ரயில்வே போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அப்போது உத்திராபதி சட்டை பாக்கெட்டில் வைக்கப்பட்டிருந்த ரயில் டிக்கெட் , ஆதார் கார்ட், கோயிலில் எடுக்கப்பட்ட ரசீது ஆகிய அனைத்தும் ரயில்வே போலீசார் கைப்பற்றினர். அதனை வைத்து தான் இவர்கள் யார் என்றும் இவர்களது சொந்த ஊர் எது என்றும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். தற்போது தான் இந்த குடும்பத்தினரின் தற்கொலைக்கு அவர்கள் வாங்கிய கடன் தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.