குழந்தையின் கண்கள்

40 வாரங்கள் தாயின் கருவறையில் முழுமையாக வளர்ந்த குழந்தைகளால், வெளியே வந்த சில மணி நேரங்களில் நன்றாக கண்களைத் திறந்து பார்க்கமுடியும். பொதுவாகவே பிறந்த குழந்தைகளுக்கு கண்ணில் சில குறைகள் தென்படலாம்.


·         கண் இமைகள் மிகவும் பிசுபிசுப்பாக காணப்படலாம்.  இதனை பஞ்சு கொண்டு துடைத்தாலே போதும், மருந்துகள் தேவைப்படாது.

·         கருப்பையில் இருந்து வெளியேறியபோது உண்டான அழுத்தத்தால் குழந்தையின் கண் இமைகள் உப்பி பெரியதாக தென்படும். இது ஓரிரு நாட்களில் தானாகவே மறைந்துவிடும்.

·         சில குழந்தைகளுக்கு கண் தசைகள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு கால தாமதமாகலாம். அதனால் மாறு கண் போன்று காட்சியளிப்பதும் தானாகவே சரியாகிவிடும்.

·         வெளிச்சத்தைக் கண்டதும் கண்களை மூடுவதும், தலையை திருப்பிக் கொள்வதும் சகஜமான ஒன்றுதான். கண்ணில் ஏதோ பிரச்னை என்று கவலைப்பட தேவையில்லை.

பிறந்த முதல் மாதத்தில் குழந்தையால் மிகவும் குறைந்த தூரத்தில் இருப்பதை மட்டுமே பார்க்க முடியும். இன்னும் சொல்லப்போனால் அம்மாவை மட்டுமே அடையாளம் கண்டுகொள்ளும். வேறு எதையும் பார்ப்பதில்லை என்பதையும் குறையாக எண்ணி கவலைப்பட வேண்டாம்.