மும்பையிலிருந்து கோலாப்பூர் சென்ற ரயிலில் தவித்துக்கிடந்த 1,050 பேரை இந்திய பேரிடர் வீரர்கள் மீட்டெடுத்த சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓடும் ரயிலை சூழ்ந்த வெள்ளம்! சிக்கித் தவித்த 1000 பேர்! கடவுள் போல் வந்த ராணுவம்! பிறகு நேர்ந்த அதிசயம்!

மும்பையில் அதிக அளவில் மழை பெய்து கொண்டிருக்கிறது. பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மும்பையிலிருந்து கோலாப்பூர் நகரிற்கு மகாலட்சுமி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த வழிப்பாதையில் உள்ஹாஸ் ஆறு சென்று கொண்டிருக்கிறது. பலத்த மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தானே நகரின் ரயில் நிலையத்தில் வெள்ள நீர் புகுந்துள்ளது. தண்டவாளத்தில் வெள்ளை நீரானது தேங்கத் தொடங்கியது. இதனால் மகாலட்சுமி விரைவு ரயிலினால் முன்னே செல்ல இயலவில்லை. ரயிலானது பத்லாபூர் பகுதியில் சிக்கிக் கொண்டது. வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்ட ரயிலானது இன்று காலை முழுவதும் பத்லாப்பூரில் நின்று கொண்டிருந்தது.
பயணிகள் தவியாய் தவித்து கொண்டிருந்தனர். தகவல் அறிந்த மகாராஷ்டிரா மாநில முதலமைச்சரான தேவேந்திர பட்னாவிஸ் இந்திய பேரிடர் மையத்தை தொடர்புகொண்டு வீரர்களை அனுப்புமாறு கூறியுள்ளார். மேலும் கடற் படை வீரர்களையும் ராணுவப் படை வீரர்களையும் அழைத்து மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து வீரர்களும் ஒன்றாக போராடியது 1,050 பயணிகளையும் பத்திரமாக மீட்டுள்ளனர். பயணிகளுள் கர்ப்பிணி பெண்ணும் 9 மாத குழந்தையும் இருந்துள்ளனர் அவர்களையும் இந்திய பேரிடர் ஆணையத்தின் வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 19 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயிலின் மூலம் கோலாபூருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
இந்த சம்பவமானது ரயிலில் இருந்த பயணிகளை மிகவும் திடுக்கிட செய்துள்ளது.