ஒரு பொண்ணு வேணும்! போலீஸ் ஸ்டேசனா? புரோக்கர் ஆபீசா? லாட்ஜ் பெண் உரிமையாளர் ஆவேசம்!

லாட்ஜ் உரிமையாளரிடம் உல்லாசமாக இருப்பதற்கு பெண் வேண்டும் என்று மாஜி எம்.பி.யின் கணவர் கேட்டிருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.


கோபிச்செட்டிபாளையத்தில் பாஸ்கரன் வீதி அமைந்துள்ளது. இங்கு சாமுவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் நிர்மலா. நிர்மலாவின் வயது 45. கடந்த 12 வருடங்களாக நிர்மலா அதே பகுதியில் ஒரு லாட்ஜ் நடத்தி வருகிறார்.

திருப்பூர் மாவட்டத்தின் முன்னாள் எம்.பி சத்யபாமா. இவருடைய கணவரின் பெயர் வாசு. இவருக்கும் லாட்ஜ் உரிமையாளரான நிர்மலாவுக்கும் கடந்த சில வருடங்களாகவே நெருக்கம் இருந்துள்ளது.

நேற்று காலை வாசு நிர்மலாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதில் அவர் அநாகரீகமாக பேசியுள்ளார். அவர் பேசிய ஆடியோவில், "எனக்கும் உங்களுக்கும் எவ்வளவு நெருக்கம் என்று எல்லோருக்கும் தெரியும். உங்ககிட்ட கேட்கக்கூடாது தான். உங்க லாட்ஜ்ல என்ன நடக்குதுன்னு தெரியும்.

எனக்கு சந்தோசமாக இருக்க ஒரு பொண்ணு வேணும்" என்று வாசு கேட்டுள்ளார். வாசுவின் பேச்சை கேட்டவுடன் நிர்மலா அதிர்ந்துள்ளார். தன்னால் முடியாது என்று மறுத்துள்ளார். ஆனால் அதற்கு நிர்மலாவை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். 

உடனடியாக நிர்மலா கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். ஆனால் அவரளித்த புகாரை காவல்துறையினர் பெற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து நிர்மலா ஊடகங்களிடம் பேட்டியளித்தார். "பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையினர் இப்படி இருக்கலாமா. 50 ரவுடிகள் மிரட்டுறாங்க சிஆர்ஃப் காப்பி கேட்டா நாக்கவழிக்கவானு கேக்குறாங்க. இது பிரோக்கர் ஆஃபிஸ். பணம் கொடுத்தா பண்ணுவாங்க.

நியாயம் கிடைக்கலன்னா இங்கேயே தீ குளிப்பேன்" என்று கூறினார். இந்த சம்பவமானது கோபியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.