தீயில் சிக்கிக்கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர், மனைவி மற்றும் குழந்தை! ஆபத்தான முறையில் மீட்பு!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்தின் வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவமானது கொச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த். இவர் 2006 ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக விளையாடினார். ஐ.பி.எல் போட்டிகளில் மேட்ச் பிக்சிங் செய்ததால் வாழ்நாள் முழுவதும் இந்திய அணிக்காக விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அவருடைய தண்டனை குறைக்கப்பட்டு 7 ஆண்டுகளுக்கு அவருக்கு விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. 

ஸ்ரீசாந்தின் வீடானது கேரள மாநிலத்தில் எட்டப்பள்ளி என்னும் இடத்தில் அமைந்துள்ளது. விபத்து ஏற்பட்டபோது ஸ்ரீசாந்த் அவருடைய வீட்டில் இல்லை. ஸ்ரீசாந்தின் மனைவி மற்றும் குழந்தை உட்பட 2 பணியாட்கள் வீட்டின் முதல் தளத்தில் இருந்துள்ளனர்.

அதிகாலை 2 மணியளவில் வீட்டில் மளமளவென்று தீ பிடித்துள்ளது. இதனால் அவர்களால் வீட்டை விட்டு வெளி வர இயலவில்லை. அவர்கள் அலறி கூச்சலிட்டனர். அப்போது பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு அழைப்பு விடுத்தனர். தீயணைப்பு படை வீரர்கள் விரைவாக வந்து ஸ்ரீசாந்தின் வீட்டு கண்ணாடியை உடைத்தனர். 

கண்ணாடி உடைத்ததால் ஏணியை போட்டு அவர்களை எளிதாக மீட்டெடுத்தனர். இருப்பினும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்களையும் காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது கொச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.