அவன் கவுன்சிலராக என்னை இன்னொருத்தன் கூட படுக்கச் சொல்றான்! அதிமுக பிரமுகர் மீது பெண் கூறிய பகீர் புகார்!

அதிமுக பிரமுகர் ஒருவர் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்துள்ள சம்பவமானது கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டத்தில் முதுநகர் சாலக்கரை என்னுமிடம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அம்சவல்லி என்ற 35 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவர் இன்று எஸ்பி அலுவலகத்திற்கு சென்று திடுக்கிடும் புகார் ஒன்றை சமர்ப்பித்துள்ளார். 

என் பெயர் அம்சவல்லி. என்னுடைய வயது 35. என்னுடைய கணவர் சிங்கப்பூரில் பணியாற்றி கொண்டிருக்கிறார். இதனிடையே என்னுடைய உறவினரும் முன்னாள் கவுன்சிலருமான அ.திமு.க.வின் வினோத்ராஜ் என்னுடன் நெருக்கத்தில் இருந்தார். என்னிடம் ஆசை வார்த்தை கூறி என்னை பலமுறை பாலியல் ரீதியில் துன்புறுத்தியுள்ளார். 

கடலூரிலுள்ள ஒரு லாட்ஜுக்கு என்னை வரவழைத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். அங்கு நிகழ்ந்தவற்றை அவர் வீடியோவாகவும் எடுத்தார். இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக என்னை பல முறை மிரட்டி உல்லாசம் அனுபவித்தார். 

பிற கட்சிகளில் உள்ள முக்கிய பிரமுகர்களிடம் என்னை தொடர்பு கொள்ளுமாறு வற்புறுத்தினார். மேலும் கவுன்சிலர் பதவி கிடைப்பதற்காக அ.தி.மு.க.வின் முக்கிய பிரமுகரிடம் என்னை பாலியல் உறவில் ஈடுபட வற்புறுத்தினார். என்னை மிரட்டி இதுவரை ஒரு கோடி ரூபாய் வரை பணத்தை பெற்றுள்ளார்.

மேலும் இதுகுறித்து நான் ஊர் பஞ்சாயத்திலும், என்னுடைய உறவினர்களிடமும் தெரிவித்தேன். ஆனால் வினோத்ராஜ் அதிமுகவில் செல்வாக்குடன் இருப்பதால் அவர்கள் நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டனர். இது தெரிந்தவுடன் வினோத்ராஜ் கூலிப்படையை ஏவி என்னையும், என்னுடைய குழந்தையையும் கொலை செய்ய முயன்று வந்தார். மேலும் வினோத்ராஜ் காவல்நிலையத்தில் என் மீது பொய்யான புகாரை கூறி மிரட்டி, வெள்ளை தாளில் கையொப்பம் வாங்கிக்கொண்டார்.

காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டு என்னுடைய பணத்தை திருப்பித்தர ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் வினோத்ராஜை கைது செய்து செய்த குற்றத்திற்காக உரிய தண்டனை அளிக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவமானது கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.