கோவை மாநகராட்சியில் குப்பை அள்ளும் வேலை! திரண்டு வந்த என்ஜினியரிங் பட்டதாரிகள்! ஏரோநாட்டிக்கல் இன்ஜினியர் எல்லாம் வரிசை கட்டிய பரிதாபம்!

துப்புரவு பணியாளர்களுக்கான பணியிடங்களுக்கு என்ஜினீயர்கள் விண்ணப்பித்திருந்த சம்பவமானது கோவை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.


கோவை மாவட்டத்தில் ஏறத்தாழ 2,000 நிரந்திர துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களைத் தவிர 1500 துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த முறையில் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே காலியாக உள்ள 549 நிரந்திர துப்புரவு பணியாளர்களுக்கான நேர்காணல் நேற்று நடைபெற்றது.  இந்தப் பணியிடங்களுக்கு ஆக மொத்தம் 7,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான நேர்காணல் நேற்று கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

நேர்காணலில் கலந்து கொண்டவர்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் எஸ்.எஸ்.எல்.சி படித்தவர்கள். டிப்ளோமா, ஐ.டி.ஐ ஆகிய பட்டம் பெற்றவர்களும் இந்த நேர்காணலில் கலந்து கொண்டனர். 2 பட்டங்கள் பெற்றவர்களும், எஞ்ஜினியர்களும் கூட இந்த நேர்காணலில் கலந்து கொண்டிருந்தனர். பணியிடங்களுக்கான வயது வரம்பு 18 முதல் 56 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மேலும் தமிழில் எழுதிப்படிக்க தெரிந்தாலே இந்த பணியிடத்திற்கான தகுதியை பெற்றுவிடலாம். 

நேற்று நடைபெற்று முடிந்த நேர்காணல், வெள்ளிக்கிழமையும் தொடரவுள்ளது. மிகுதியாக கூட்டம் அலைமோதியதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.