என் மகன் சாவுக்கு அவன் காதலித்தவள் தான் காரணம்..! ஆடியோ, புகைப்படத்தை வெளியிட்டு கதறும் அப்பாவி தந்தை..! சென்னை பரிதாபம்!

சென்னையில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் ஒருவர் காதல் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை மணலியில், சேலவாயல் துர்க்கை அவன்யூ அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நடராஜன் (வயது 22) என்ற மகன் உள்ளார். நடராஜன் துரைப்பாக்கத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் சிவில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி நடராஜன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதனையடுத்து நடராஜனின் தந்தை ஏழுமலை காவல் நிலையத்தில் தன்னுடைய மகனின் தற்கொலை பற்றி தகவல் அளித்து புகார் அளித்திருக்கிறார். மேலும் தனது மகன் கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார். அந்தப் பெண்ணால் தான் தன் மகன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறான் என்றும் கூறியிருக்கிறார் ஏழுமலை.

ஏழுமலை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தங்களுடைய விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நடராஜன் காதலித்த அந்த பெண் மற்றும் அவரோடு படிக்கும் சக மாணவர்களிடமும் விசாரணை நடைபெற்றுள்ளது. மேலும் நடராஜன் பயன்படுத்திய செல்போனில் இருந்து ஒருசில ஆடியோக்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அதாவது நடராஜன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக பேசப்பட்ட ஆடியோக்கள் என்று போலீசார் தரப்பு கூறுகிறது. அந்த ஆடியோவில், ரொம்ப நாள் கழித்து போனில் பேசுவதால் மிகவும் சந்தோஷப்படுகிறேன். இத்தனை நாள் நீ என்கிட்ட பேசாமல் இருந்ததனால் அதை பீல் பண்ணி நான் அழுதுக்கிட்டே இருந்தேன். நீ பேசாமல் இருந்ததால ரொம்ப கஷ்டப்பட்டேன்.. ஏன் என்கிட்ட நார்மலாகவே பேச மாட்ற. அவள் என்ன சொன்னா? நான் உன்ன பத்தியும் அவளை பற்றியும் தப்பா பேசவே இல்லை.. அவ ஓவரா பண்றா. எனக்கு உன்னுடைய வாய்ஸ் கேக்கணும்னு ஆசையா இருந்தது கான்ஃபரன்ஸ் கால் போட சொன்னா போடவே இல்லை. அதுமட்டும் இல்லாம நீ நார்மலாக இல்லை என்று கூறினாள் என ஒரு ஆடியோ இருந்துள்ளது.

இதேபோல் மற்றொரு ஆடியோ பதிவில், எனக்கு நீதான் .. உனக்கு நான் தான் யார் சொன்னாலும் மாறாது .. நான் பார்த்துக்கொள்கிறேன்.. என்னால உன்ன விட்டு போக முடியாது.. அந்தளவுக்கு நான் உன்னை உண்மையா லவ் பண்றேன். என்னிடம் கோபத்தில் பேசாதே என்னிடம் ஏதாவது தப்பு இருந்தா நீ சொல்லு நான் கேட்டுக்குறேன் என்று அந்த ஆடியோ பதிவு இருந்துள்ளது. தற்போது போலீசார் இந்த ஆடியோ பதிவை மையமாக வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன்மூலம் இந்த வழக்கிற்கான தெளிவான தகவல்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.