என்ஜினியரிங் படித்தும் வேலை இல்லை..! மனநிலை பாதிப்பு..! 23 வயதில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு! அதிர்ச்சியில் நெல்லை!

வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது  திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருநெல்வேலி மாவட்டத்தில் மானூர் என்னும் இடம் அமைந்துள்ளது. இதற்கருகிலுள்ள உக்கிரன்கோட்டை என்னும் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகனின் பெயர் இசக்கி வெங்கடேஷ். இவர் ஒரு என்ஜினீயரிங் பட்டதாரியாவார். ஓராண்டு காலத்திற்கு சென்னையில் பணியாற்றி வந்தார். இதனிடையே தொடர்ந்து வேலை கிடைக்காததால் சொந்த ஊரான உக்கிரன்கோட்டைக்கே இடம்பெயர்ந்தார். 2 மாதங்கள் ஆகியும் அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை.

இதனால் மன உளைச்சலில் காணப்பட்ட வெங்கடேஷ் அதே பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் மனநலம் பாதிப்பிற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

இதனிடையே நேற்று மாரியப்பன் டீ கடைக்கு சென்றுள்ளார். அதே நேரத்தில் மாரியப்பனின் மனைவியான சுப்புலட்சுமி தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். தங்கைகள் இருவரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வெங்கடேஷ் சமையலறைக்குள் நுழைந்து உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீ குளித்துள்ளார்.

வலி தாங்காமல் வெங்கடேஷ் அலறியதை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். மாரியப்பன் சாக்குப்பையால் வெங்கடேஷின் உடலில் பரவியிருந்த தீயை அணைக்க முயன்றார். ஆனால் எதிர்பாராத விதமாக அவருடைய உடல் முழுவதும் தீ பரவியது. சம்பவ இடத்திலேயே வெங்கடேஷ் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவமறிந்த மானூர் காவல்துறையினர் வெங்கடேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.