வீடுகள் மீது விழுந்து வெடித்து சிதறிய விமானம்! துடிதுடித்து உயிரிழந்த 23 பேர்! பதைபதைப்பு சம்பவம்!

காங்கோ நாட்டில் குடியிருப்புக்குள் விமானம் விழுந்ததில் 23 பேர் பலியான சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காங்கோ நாட்டின் உள்நாட்டு விமான நிறுவனங்களில் ஒன்று பசீ பீ. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான விமானமானது கோமா என்ற நகரத்திலிருந்து பெனி என்ற நகரத்திற்கு கூறப்பட்டுள்ளது.

விமானம் பறக்க தொடங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே ஒரு எண்ஜினிலிருந்து பயங்கரமான சத்தம் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன விமான ஊழியர்கள், விமானத்தை கோமா விமான நிலையத்திற்கு திருப்ப முயற்சி செய்தனர். ஆனால் எதிர்பாராவிதமாக பைலட்டின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிய விமானம் குடியிருப்புக்குள் விழுந்து கோர விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து அரங்கேறிய இடத்திலிருந்து 23 சடலங்களை மீட்புப்படையினர் மீட்டெடுத்துள்ளனர். விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

இந்த விபத்திற்கான காரணம் குறித்து அந்நாட்டு அரசாங்கம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவமானது காங்கோ நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.