குழந்தை பிறந்தது முதல் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி! ஆத்திரத்தில் கணவன் அரங்கேற்றிய பயங்கரம்! சென்னை திகுதிகு!

மனைவியுடன் உல்லாசமாக இருப்பதற்கு தடையாக இருந்த இரண்டு மாத பெண் குழந்தையை அடித்துக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.


துர்கா (வயது 25) என்ற பெண் சென்னையில் உள்ள கேகே நகரில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் ஒப்பந்தம் அடிப்படையில் துப்புறவு பணியை செய்து வருகிறார். துர்கா முதலில் ஒருவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து விட்டனர்.

துர்கா விற்கு தன்னுடைய முதல் கணவர் மூலம் ஒரு மகனும் மகளும் உள்ளனர். முதல் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த துர்கா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தன்னுடன் ஒப்பந்தப் துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் எல்லப்பன் (வயது 25) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் தற்போது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த குழந்தைக்கு எல்லப்பன் துர்காவும் இணைந்து ராஜமாதா என்று பெயரிட்டனர். 

2 மாத கைக்குழந்தை ராஜ மாதாவை தந்தை எல்லப்பன் ஈவுஇரக்கமின்றி அடித்துக் கொலை செய்திருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைப் பற்றி அறிந்த துர்கா அருகில் இருந்த காவல் நிலையத்தில் தன் கணவர் எல்லப்பன் -ஐ பற்றி புகார் அளித்துள்ளார். மேலும் அந்த புகாரில், துர்காவின் கணவர் எல்லப்பன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் தினமும் குடித்துவிட்டு போதையில் தன்னை உல்லாசத்திற்கு அழைப்பார் என்றும் கூறப்பட்டது.

 நேற்றைய முன் தினம் இரவு நேரத்தில் எல்லப்பன் துர்காவை உல்லாசத்திற்காக அழைத்திருக்கிறார். அப்போது இரண்டு மாத கைக்குழந்தை ஆன ராஜமாதா மிகவும் அழுது கொண்டே இருந்ததால் கணவரின் ஆசைக்கு இணங்க மறுத்து இருக்கிறார் துர்கா. இதனால் ஆத்திரமடைந்த எல்லப்பன் ஒன்றுமே அறியாத இரண்டு மாத சிசுவை ஈவு இரக்கமின்றி அடித்திருக்கிறார். எல்லப்பன் செய்த செயலை தடுக்க சென்றதற்கு துர்காவையும் ஈவு இரக்கமின்றி அடித்திருக்கிறார்.

இதனையடுத்து நேற்று காலை கண் விழித்துப் பார்த்த போது குழந்தையின் மூக்கிலிருந்து ரத்தம் கசிந்து இறந்து கிடந்தது. இதனையடுத்து குழந்தை ராஜமாதா உயிரிழந்ததை பார்த்த தாய் துர்கா மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த நடந்த சம்பவத்தை முழுவதுமாக விவரித்து அந்த புகார் மனுவில் துர்கா குறிப்பிட்டிருக்கிறார். 

இதனையடுத்து சென்னை தியாகராய நகர் துணை கமிஷனர் அசோக்குமார் இந்த வழக்கைப் பற்றி விசாரிக்குமாறு எம்ஜிஆர் நகர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறார். 

பின்னர் பெற்ற குழந்தையை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர் மேலும் குழந்தைகளின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது அந்த பிரேத பரிசோதனை முடிவில் குழந்தை ராஜமாதா எல்லப்பன் அடித்ததால் தான் உயிரிழந்திருக்கிறார் என்பது உறுதியானது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.