அண்ணாசி பழத்திற்குள் வெடி மருந்து..! பசியுடன் வந்த கர்ப்பிணி யானை வயிற்றுக்குள் இருந்த குட்டியானை..! முதல்முறையாக வெளியான புகைப்படம்!

பசியுடன் வந்த கர்ப்பிணி யானையை அன்னாசி பழத்திற்குள் வெடி வைத்து கொலை செய்துள்ள சம்பவமானது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரளாவிலுள்ள மலப்புரத்தில் யானை ஒன்று பசியுடன் வந்துள்ளது. அந்த யானைக்கு கிட்டத்தட்ட 14 முதல் 15 வயது இருக்கும். அப்போது மர்ம நபர்கள் சிலர் அன்னாசி பழத்திற்குள் வெடிவைத்து யானைக்கு கொடுத்துள்ளனர். அந்த யானை சாப்பிட்டவுடன் வெடியை வெடிக்க வைத்துள்ளனர். படுகாயமடைந்த யானை கடந்த 3 நாட்களாக வெள்ளையாறு நதிக்கு உள்ளேயே இருந்துள்ளது. 

மேலும் வலி அதிகரித்துள்ள போதெல்லாம்,அந்த யானை தண்ணீரை குடித்து வலியை சரி செய்துள்ளது. 2 நாட்களாக யானையின் நடவடிக்கைகளை பார்த்து சந்தேகித்த வனத்துறையினர், 2 கும்கி யானைகளை பயன்படுத்தி நதியிலிருந்து யானையை வெளியே எடுத்து வந்தனர். மருத்துவர்கள் யானையை காப்பாற்ற எவ்வளவோ முயற்சி செய்தபோதிலும், துரதிஷ்டவசமாக யானை இறந்து போனது. வெடி மருந்து வெடித்தது நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டதால் மூச்சுத்திணறலால் தவித்து அந்த யானை உயிரிழந்துள்ளது. 

யானையை பிரேத பரிசோதனை செய்தபோது தான் கருப்பையில் இதயமும், அமிலமும் இருந்ததை மருத்துவர் கண்டறிந்தார். அப்போதுதான் யானை கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. மருத்துவர் ஒருவர் இறந்து போனார் கருவில் இருந்த யானையை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தார்.

இந்த புகைப்படமானது நாடு முழுவதிலும் பெரும் வைரல் ஆகியது. கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் அவர்கள், இது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் இதற்கு காரணமான நபர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவர். இதுகுறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார். 

சமூக வலைதளங்களில் மக்கள் பலர் வெகுண்டெழுந்து பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது நாடு முழுவதிலும் வைரலாகி வருகிறது.