உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஒன்றிய தலைவரின் மகள் விபத்தில் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரியப்பாவை விட்டுட்டு போய்ட்டியேம்மா..! நா தழுதழுக்க கதறிய திருமா..! நெஞ்சை உலுக்கி எடுத்த சம்பவம்!

மதுரை மாவட்டத்தில் ஊமச்சிகுளம் அருகே உள்ள எருக்கலைநத்தம் கிராமத்தில் கார்வண்ணன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் எழிலரசி. இவர் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தென்னமரத்து சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவர் வெற்றி பெற்றதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனிடம் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினார். திருமாவளவன் மதுரையில் இருப்பதை அறிந்துகொண்டபின் கார்வண்ணன் தன் குடும்பத்தினருடன் அவரை காண்பதற்கு சென்றுள்ளார்.
செல்லும் வழியிலேயே எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் 3 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து உடனடியாக மருத்துவமனைக்கு திருமாவளவன் சென்றார். பின்னர் அவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையானது, அவர் எந்த அளவிற்கு காயப்பட்டார் என்பதை எடுத்துரைத்தது.
"உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் என்னை பார்க்க வேண்டுமென்று அவர்கள் வந்து கொண்டிருந்தபோதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. யாழினியின் மண்டையோட்டின் வெளியே எந்த காயமும் இல்லை. ஆனால் உள்ளே மூளை பழமையான சேதமடைந்துள்ளது. துளி அசைவுமின்றி ஆக்சிஜன் கருவி பொருத்தப்பட்டு மூச்சு விடுவதற்கு மிகுந்த சிரமப்பட்டார். அவரை எப்படி இருந்தாலும் காப்பாற்ற இயலாது என்று மருத்துவர்கள் கூறிய போது என் இதயம் வெடித்தது.
பெரியப்பாவின் மடியில் அமர்ந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்று யாழினி விரும்பியதாக கேட்டறிந்த போது மனது இறுக்கமானது. பெரிய பெண்ணாக வளர்ந்து பெரியப்பாவுக்கு பாடிகார்டாக செயல்படுவேன் என்று கூறிய அந்த பிஞ்சு குழந்தையின் உயிரிழப்பானது என்னை பெரிய அளவில் பாதித்துள்ளது. என்னுடைய கண்ணீர் பூக்களால் அந்த பிஞ்சு குழந்தைக்கு அஞ்சலி செலுத்துகிறேன்" என்று கண்ணீர் மல்க திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவமானது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.