தமிழகத்தில் அடுத்த மாதம் 2 தொகுதிகளுக்கு தேர்தல்! விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது.


பாராளுமன்ற தேர்தலானது சென்ற மே மாதம் முடிந்தது. இந்திய நாட்டிலேயே ஒரே ஒரு பாராளுமன்ற தொகுதியான வேலூரில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இந்த தேர்தலில் நாளை நடைபெற உள்ளது. என் நினைவு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தற்போதைய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்தகுமார், நாங்குநேரி தொகுதியின் எம்.எல்.ஏ ஆவார். பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை மே மாதம் 27-ஆம் தேதியன்று ராஜினாமா செய்தார். 

விக்ரவாண்டி தொகுதியில் திமுக எம்.எல்.ஏவாக பணியாற்றியவர் ராதாமணி. அவரது உடல்நிலையில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக ஜூன் மாதம் 14-ஆம் தேதியன்று உயிரிழந்தார். நிலையில் நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி தொகுதிகள் தமிழகத்தில் காலியானவையாக அறிவிக்கப்பட்டன. 

இவ்விரு தொகுதிகளுக்கும் அக்டோபர் மாதத்திற்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். 9-ஆம் தேதியன்று வேலூர் தொகுதியின் முடிவு அறிவிக்கப்பட்ட உடன் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடைபெறும். தமிழக தேர்தல் அதிகாரிகள் இவ்விரு தொகுதிகளுக்கும் அடுத்த மாதத்தில் தேர்தலை நடத்தலாம் என்று ஆலோசித்து வருகின்றனர்.

செப்டம்பர் மாதத்தில் எந்தவித திருவிழா, விசேஷ பண்டிகைகள் இல்லாத காரணத்தினாலும், அக்டோபர் மாதத்தில் பருவ மழை தொடங்கி விடும் அபாயம் உள்ளதாலும் அடுத்த மாதமே தேர்தலை நடத்திவிட திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வேலூர் தொகுதி தேர்தலின் முடிவு வெளியான ஒரு சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.