எடப்பாடியாரின் புதிய சாதனை… பொங்கல் பரிசுடன் ஆவின் நெய். எந்தெந்த ஊருக்குத் தெரியுமா?

ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசின் சார்பாக தைத் திருநாளை முன்னிட்டு பொங்கல் பொருட்கள் வழங்குவது வாடிக்கை. பொங்கல் பையில் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்களும் கையில் ஆயிரம் ரூபாயும் கொடுக்கும் அற்புத் திட்டத்தை எடப்பாடி பழனிசாமிதான் தொடங்கி வைத்தார்.


இந்த வகையில் இப்போது அடுத்தகட்டமாக ஒருசில ஊர்களில் உள்ள மக்களுக்கு பொங்கல் பரிசுடன் ஆவின் நெய் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான வேலைகளை மதுரை ஆவின் நிறுவனம் விறுவிறுப்புடன் செய்து வருகிறது.

இது குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்பதால், தமிழகம் முழுவதும் வழங்க இயலாத சூழல் நிலவுகிறது. ஆகவே, மதுரை, தேனி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும் நெய் வழங்குவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு தமிழக மக்கள் அனைவருக்கும் நெய் பரிசு கிடைக்கும் என்று உறுதியாகவே நம்பலாம்.