முதல்வர் எடப்பாடியார் 57 காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி..!

காவல் துறையினருக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பது அ.தி.மு.க. ஆட்சியில் மட்டும்தான் நடந்துவருகிறது. இதனை மென்மேலும் நிரூபிக்கும் வகையில் பல்வேறு காரணங்களால் மரணம் அடைந்து காவலர்கள் குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதிஉதவி வழங்கியிருக்கிறார்.


முதல்வர் அறிக்கையின்படி, சென்னை பெருநகரக் காவல், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பெ. சந்திரசேகரன்; வேப்பேரி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மு. அழகர்சாமி; இராயப்பேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த வ. இராஜேந்திரன்; சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கு. சிவகுமார்;

புனிததோமையர்மலை ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த டி. ராஜாமணி; ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பூ. ரவிந்திரன்;துறைமுகக் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சி. முரளிபாபு போன்ற ஏராளமான நபர்கள் காவல் துறையில் திடீர் மரணம் அடைந்துள்ளனர்.

உடல் நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். 

மேலும், உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.