எடப்பாடியின் 'தில்' ஸ்டேட்மென்ட்... திகிலில் திமுக!

தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தாலும், மக்களுக்கு அ.தி.மு.க. மீது எந்த கோபமும் இல்லை என்று உளவுத்துறை தெரிவித்திருக்கும் தகவல், ரத்தத்தின் ரத்தங்களுக்கு சந்தோஷம் கொடுத்துள்ளது.


இதற்கு காரணம் தி.மு.க.வை பொதுமக்களிடம் அம்பலப்படுத்தியதுதான். தி.மு.க. என்றாலே ரவுடியிசம், ஊழல், பெண்களை இழிவுபடுத்துவது என்று மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்துவிட்டது. 

பல இடங்களில் ஏதோ ஆட்சிக்கு வந்துவிட்டதைப் போல, திமுகவினர் அராஜகங்களில் ஈடுபடுவது, பொதுமக்களிடையே, 'இப்பவே இப்படினா... இவங்கெல்லாம் ஆட்சிக்கு வந்தா மீண்டும் என்ன ஆட்டம் போடுவாங்க...!' என்ற எண்ணம் ஏற்படத் தொடங்கிவிட்டதால் தேர்தல் களம் அதிமுகவுக்கு ரொம்பவே சாதகமாக மாறிவிட்டது. .

மேலும் முதல்வர் எடப்பாடி மேற்கொள்ளும் பிரசாரம் மக்களிடையே செமையாக ரீச் ஆகி உள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் இலவசம், குடும்ப தலைவிகளுக்கு மாத ஊதியம் 1500 ரூபாய், வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை, வீட்டுக்கு ஒரு வாஷிங் மெஷின் போன்றவை மக்கள் மத்தியில், குறிப்பாக பெண்கள் மத்தியில் ஒரு கதாநாயகனாகவே வலம் வருகிறது. மேலும் அதிமுக சொன்னால் செய்யும் என்ற உறுதி கூட மக்களுக்கு இருந்து வருவதே இந்த மாற்றத்திற்கு காரணம்" என்று சொன்னார்.

இதையெல்லாம் உளவுத்துறை முதல்வருக்கு 'நோட்' போட்டு அனுப்பிய உற்சாகத்தில்தான், மூக்கில் விரல் வைக்கும் அளவுக்குச் சிறந்த ஆட்சியைக் கொடுத்துள்ளதாகவும் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதி என்பதை தங்களின் அனுபவம் உணர்த்துவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

முதல்வரின் இந்த 'தில்'லான ஸ்டேட்மென்ட்டைப் பார்த்து திமுக வட்டாரம் திகலடைந்து போய் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக, அ.தி.மு.க.வின் ஹாட்ரிக் உறுதியாகிவிட்டது.