உளவுத் துறை ரிப்போர்ட் ... உற்சாகத்துக்கு மாறிய எடப்பாடி!

ஆ.ராசாவின் ஆபாச பேச்சு தி.மு.க.வுக்கு பெரிய ஆப்பு வைத்திருப்பது தெரியவந்துள்ளது. ஆம், ‘முதல்வரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று ஆ.ராசா கூறிவிட்டாலும், தமிழக மக்களின் கோபம் அடங்குவதாக இல்லை.


இந்த நிலையில், உளவுத்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்ட எடப்பாடி, தேர்தல் நிலவரம் குறித்து கேட்டறிந்துள்ளார். அப்போது அவர்கள் கொடுத்த ரிப்போர்ட், எடப்பாடிக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

வழக்கம்போல் கொங்கு மண்டலம், தென் மாவட்டங்கள் அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கிறது. பாமக கூட்டணி மேற்கு மண்டல வெற்றியை உறுதிப்படுத்தி விடும். சென்னையிலும் கணிசமான தொகுதிகளை அதிமுக கைப்பற்றும். டெல்டா பகுதிகளில் தேர்தலுக்கு முன்னர் அறிவித்த விவசாயக் கடன் ரத்து, நகை கடன் ரத்து, பொங்கல் பரிசு போன்றவை நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

ஒரு 30 தொகுதிகள் மட்டுமே கடும் போட்டியாக உள்ளது. இதில் 10 தொகுதிகளில் கவனம் செலுத்தி வெற்றி பெற்றாலே, சுலபமாக மீண்டும் ஆட்சியமைத்து விடலாம் என ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டுள்ளது. இந்தத் தகவல் எடப்பாடிக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ள நிலையில் விஷயம் அதிமுக வட்டாரத்திலும் பரவ, ரத்தத்தின் ரத்தங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.