இரண்டாவது இடம் போயிடுச்சுங்க
எடப்பாடி பழனிசாமி தலைமை பதவிக்கு ஆபத்து,!

2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டு இருக்கிறது. இதுவரை வெளியான தகவல்களில் மிகவும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருப்பவர் என்றால், அது எடப்பாடி பழனிசாமி மட்டும் தான்.
எப்போதும் தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையில் தான் போட்டி என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், இன்றைய வாக்கு நிலவரம் வேறாக இருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் 13 தொகுதிகளில் பா.ஜ.க. இரண்டாம் இடத்திற்கு வந்திருக்கிறது.
இதைவிட அதிர்ச்சிகரமான செய்தி என்னவென்றால் சீமானின் நாம் தமிழர் கட்சியானது மூன்று தொகுதிகளில் இரண்டாவது இடத்துக்கு வந்திருக்கிறது. இதை வைத்துப் பார்க்கும்போது கிட்டத்தட்ட பாதி இடங்களில் அ.தி.மு.க. மூன்றாவது இடத்திற்குப் போயிருக்கிறது.
இந்த நிலை தொடரும் பட்சத்தில் தேர்தல் முடிவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு ஆபத்து வரலாம் என்று கூறப்படுகிறது. ஒன்றுபட்ட அ.தி.மு.க. இல்லை என்றால் அதனால் தி.மு.க.வுடன் போட்டியிட முடியாது என்று கூறப்பட்டு வருவதை எடப்பாடி பழனிசாமி மறுத்துவந்தார். தன்னுடைய தலைமையே நீடிக்கும் என்று கூறிவந்தார்.
ஆனால், இந்த நிலையில் அ.தி.மு.க. எல்லா இடங்களிலும் இரண்டாம் இடம் பிடிக்கவில்லை என்றால் தலைமை மாற்றம் நடக்க வேண்டிய சூழல் நிகழ்ந்துவிடும் என்பதே உண்மை.