யாராக இருந்தாலும் எந்த கட்சி தலைவராக இருந்தாலும் அவர்களை வரம்புமீறி மரியாதை குறைவாக பேசுவது சரியல்ல என்று எடப்பாடி பழனிசாமி நெல்லைக்கண்ணனின் பேச்சுக்கு கருத்து தெரிவித்திருக்கிறார்.
யாராக இருந்தாலும் ஜோலியை முடித்து விடுவேன் என்று பேசுவது சரியல்ல..! எடப்பாடி பழனிச்சாமி அதிரடி கருத்து..!
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் நெல்லை கண்ணன் பங்கேற்று பேசியிருந்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் நிலவும் பல பிரச்சினைகளை பற்றி தன்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்து இருந்தார் . இதனை தொடர்ந்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் தவறான வார்த்தைகள் மூலம் சித்தரிக்க துவங்கினார். ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரையும் குறிப்பிட்டு "ஜோலியை முடிச்சு விடு" நெல்லை கண்ணன் ஆவேசமாக கூறினார்.
நெல்லை கண்ணன் இவ்வாறாக பேசிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. நெல்லைக்கண்ணனின் இந்த பேச்சுக்கு மிகுந்த எதிர்ப்பு கிளம்பியது
அதிலும் தமிழகம் முழுவதும் உள்ள பாஜகவினர் பலவித போராட்டங்களையும் நடத்தினர் . அதுமட்டுமல்லாமல் உடனடியாக நெல்லை கண்ணனை கைது செய்யுமாறும் கூறினர். பெரும் போராட்டங்கள் நிலவி வந்ததால் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை கண்ணனை கைது செய்தது தவறு என்று பலரும் கூறி வருகின்றனர் . தமிழகத்தில் கருத்து சுதந்திரம் கிடையாதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி , யாராக இருந்தாலும் எந்தக் கட்சித் தலைவராக இருந்தாலும் அவர்களை வரம்பு மீறி பேசுவது சட்டப்படி குற்றம் . அதுமட்டுமில்லாமல் ஒருவர் பாரதப் பிரதமரும் உள்துறை அமைச்சரும் குறிப்பிட்ட "ஜோலியை முடிச்சு விடு" என்று சொல்லலாமா என்றும் கேள்வி எழுப்பினார் . ஆகையால்தான் நெல்லை கண்ணன் மீது சட்டப்படி போலீசார் நடவடிக்கை எடுத்தனர் என்று கூறியிருக்கிறார்.