முதல்வர் எடப்பாடி விவசாயிகளின் வாழ்வுக்காக 280 கோடியில் 22 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார்.…

விவசாயிகளின் வாழ்வுக்காக பல்வேறு இடங்களில் தடுப்பணை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அது குறித்த அரசு செய்தி குறிப்பு இதோ.


பொதுப்பணித் துறையின் கீழ்செயல்படும் நீர்வள ஆதாரத் துறை சார்பில் கடலூர் மாவட்டம்,பண்ருட்டிவட்டம்,கண்டரக்கோட்டை கிராமத்தில்,பெண்ணையாற்றின் குறுக்கே 33 கோடி ரூபாய்மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிக்கு காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் அடிக்கல்நாட்டினார்.

மேலும், தமிழ்நாட்டில்உள்ள 17 மாவட்டங்களில் 247 கோடியே 90 லட்சம் ரூபாய்மதிப்பீட்டிலான 21 திட்டப் பணிகளுக்கும் அடிக்கல்நாட்டினார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் விவசாயத்தைமேம்படுத்தும் வகையிலும், மக்களின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், கிடைக்கப்பெறும் நீரை வீணாக்காமல் நீர்நிலைகளில் தேக்கி வைக்கும் பொருட்டும், புதியநீராதாரங்களை தமிழ்நாடுஅரசு, நீர்வள ஆதாரத் துறை மூலமாக பல்வேறு பாசனமேம்பாட்டுத் திட்டங்களை சீரியமுறையில் செயல்படுத்திவருகிறது.

அந்தவகையில், கடலூர் மாவட்டம்,பண்ருட்டிவட்டம்,கண்டரக்கோட்டை கிராமத்தில்,பெண்ணையாற்றின் குறுக்கே 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்கள்.

 புதிதாக கட்டப்படவுள்ளஇத்தடுப்பணையின் நீளம் 575 மீட்டர், உயரம் 1.50 மீட்டர் மற்றும் கொள்ளளவு 28.58 மில்லியன் கனஅடி ஆகும். மேலும், தடுப்பணையின் மேற்புறம் 1500 மீட்டர் மற்றும் கீழ்புறம் 500 மீட்டர் தூரத்திற்குஇருபுறமும் வெள்ளத்தடுப்புகரைகள்அமைக்கப்படவிருக்கின்றன. இந்ததடுப்பணைகட்டுவதன் மூலம் நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு,நிலத்தடிநீர் மட்டம் வெகுவாக உயரும்.

இதனால் விவசாய உற்பத்தி அதிகரிப்பதோடு குடிநீரின் தரமும் உயரும். இதனால் இப்பகுதியிலுள்ள 728 ஆழ்குழாய் கிணறுகள் மூலம் 2912 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதிபெறும். மேலும், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரிவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட1,602 ஏக்கர் பாசனநிலங்கள் பயன்பெறும் வகையில், காட்டூர் தத்தமஞ்ஜி இரட்டைஏரிகளை இணைத்து,கொள்ளளவினை மேம்படுத்தி, நீர்தேக்கத்தைஉருவாக்கிட 62 கோடியே 36 லட்சம் ரூபாய்மதிப்பீட்டிலான திட்டம் போன்று காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நாகை, சிவகங்கை, ராமநாதபுரம் போன்று பல்வேறு மாவட்ட பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.  

மொத்தம் 280 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 22 திட்டப் பணிகளுக்கு இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளது குறிப்பிடத்தகது.