தனி மாவட்டம் வேண்டும் என்ற கால் நூற்றாண்டு காலகனவு நனவானதால் மயிலாடுதுறை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆம், , நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து, புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணை ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.
மயிலாடுதுறை மக்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. புது மாவட்டத்தை தொடங்கிவைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இந்நிலையில் தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
அதன்படி, தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உதயமாகிறது. தொடர்ந்து மாவட்டத்தின் எல்லைகளை வரையறை செய்வதற்காக சிறப்பு அதிகாரியாக லலிதா ஐ.ஏ.எஸ். என்ற அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த சில நாட்களாக மாவட்டங்களின் எல்லைகளை வரையறை செய்யும் பணியானது நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிவுற்று இன்றைய தினம் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாகியிருக்கிறது.
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்திருக்கிறார். நிர்வாக ரீதியாக இன்று முதல் 38வது மாவட்டமாக உதயமாகியிருக்கக்கூடிய மயிலாடுதுறை தன்னுடைய பணிகளை தொடங்கியிருக்கிறது.
ஏற்கனவே மாவட்ட கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஐ.பி.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கின்றார். இந்த மாவட்டத்திற்கான ஆட்சியர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாவட்டமாக உருவாகியிருக்கக்கூடிய மயிலாடுதுறையில், குத்தாலம், மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, கொள்ளிடம், செம்மனார்கோவில் என்ற 6 தாலுக்காக்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியிகிரியிருக்கிறது. அதேபோல மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் என்ற 3 சட்டப்பேரவை தொகுதிகளையும் இந்த மாவட்டம் கொண்டிருக்கிறது.
மயிலாடுதுறை மக்களுக்கு நல்ல யோகம்தான்.