புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் மட்டும்தான் தமிழகத்தில் 10 வருடமாகத் தொடர்ந்து ஒரு கட்சி ஆட்சி புரிந்தது. அந்த சாதனையை மீண்டும் படைக்க இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆரின் ஆட்சிக்குப் பின்பு சாதனை புரியும் எடப்பாடி பழனிசாமி.

ஆட்சி நிலைக்காது, மூன்று மாதங்கள் தாங்காது என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்த நிலையில், முழுமையாக ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்து தமிழக அரசியல் வரலாற்றில் புதிய சாதனை படைக்க இருக்கிறார். அது மட்டுமின்றி, மூன்றாவது முறையும் 2021 தேர்தலில் வெற்றி சூட இருக்கிறார் என்பது உறுதி.
ஏனென்றால், அரசியல் எதிரிகள் பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தரங்கெட்ட அரசியல் செய்த போதிலும் சற்றும் துவளாமல் தமிழக மக்களின் நலனுக்காக அல்லும் பகலும் உழைத்து தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்கிறார்.
தொண்டர்களுக்காகவே வாழ்ந்து இன்றும் தொண்டர்களின் மன அரியாசனத்தில் அமர்ந்திருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருவரின் வழிவந்த எடப்பாடியார் தொண்டர்களின் நாயகனாக, தமிழ் மண்ணின் மைந்தனாக 2021 தேர்தலை எதிர்கொள்கிறார்.
விவசாயி ஒருவரை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரவைக்க வேண்டியது தமிழகளின் கடமை.