என்னை தேர்வு செய்தது எம்.எல்.ஏ.க்கள்..! சசிகலாவை போட்டுத்தாக்கிய எடப்பாடி பழனிசாமி.

சசிகலா சிறைக்குச் செல்ல இருந்த நேரம், தமிழக முதல்வராக யாரை தேர்வு செய்வது என்பதில் கடும் குழப்பம் நிலவியது. அப்போது சசிகலாதான் எடப்பாடியாரை தேர்வு செய்ததாக சொல்லப்பட்டது உண்மையல்ல, எல்.எல்.ஏக்கள்தான் என்னை தேர்வு செய்தார்கள் என்று தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.


இதுகுறித்து கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி தெளிவாக பதில் அளித்திருக்கிறார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தம் மீது மிகவும் நம்பிக்கை கொண்டு இருந்தார் என்பது அமைச்சர்களுக்கும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியும் என்றும் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

1989ம் ஆண்டு ஜெயலலிதா, அதிமுக அணி சார்பில் தாம் முதன்முதலாக சேவல் சின்னத்தில் போட்டியிட்ட தருணத்தில் இருந்து அவரது மறைவு வரை கட்சிக்கு உண்மையான தொண்டனாக பணியாற்றியது அனைவரும் அறிந்த ஒன்று என்று அவர் கூறியுள்ளார்.

கட்சிக்காக பல்வேறு போராட்டங்களில் கைதாகி சிறை சென்று இருப்பதாகவும் 2021ம் ஆண்டு எடப்பாடி தொகுதி கூட்டணி கட்சியான பாமகவுக்கு ஒதுக்கப்பட்டபோதும் அதிருப்தி அடையாமல், வெற்றிக்கு பாடுப்பட்டதாகவும் பழனிசாமி கூறியுள்ளார்.கட்சிக்கும் தலைமைக்கும் அரசாங்கத்திற்கும் விசுவாசம் உள்ளவனாக இருந்த காரணத்தினால் தம் மீது நம்பிக்கை வைத்து எம்எல்ஏக்கள் முதலமைச்சராக தேர்வு செய்ததாக கூறியுள்ள அவர், சசிகலா தன்னை தேர்வு செய்ததாக கூறப்படுவதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.