தாய் மாமனுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி… அதிர வைத்த மரணம்.

முதல்வரின் தாயார் இறந்த கவலையே இன்னமும் முதல்வர் எடப்பாடியாருக்குத் தீரவில்லை. அதற்குள் அவரது தாய்மாமன் ஒருவர் மரணம் அடைந்த செய்தி, முதல்வரை மிகவும் வருந்த வைத்துவிட்டது.


கடந்த 30ம் தேதி முதல்வரின் தாய் மாமனும், அந்தியூர் முன்னாள் ஒன்றியக் கழகச் செயலாளர் கே.பி.எஸ்.ராஜா அவர்களின் தந்தையுமான எஸ்.கருப்பகவுண்டர் மரணம் அடைந்தார். 

இதையடுத்து இன்று கருப்பகவுண்டரின் புகைப்படத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கே.சி.கருப்பணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.