கிறிஸ்தவர்கள் மனதில் இடம் பிடித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி… விழா மேடையில் மூன்று மணி நேரம்

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கன்னியாகுமரியில் நடைபெற்ற அருமனை கிறிஸ்தவ விழாவில் கலந்துகொண்டு, கிறிஸ்தவர்களின் மனதில் இடம் பிடித்தார். .


நாகர்கோவிலில் குமரிமாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்படி மருத்துவ படிப்புக்கு தேர்வான 13 மாணவர்கள் முதல்வரை அரசினர் விடுதியில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு முதல்வர் பரிசுகள் கொடுத்தார்.

அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு தக்கலை, மார்த்தாண்டம் வழியாக அதிரிபதிரியான வரவேற்புக்கு இடையில் அருமனை கிறிஸ்மஸ் விழா மேடைக்கு வந்துசேர்ந்தார்.

இந்த விழாவின் ஏற்பாட்டாளரும் அருமனை கிறிஸ்துவ பேரவை அமைப்பாளருமான ஸ்டீபன் கடந்த காலங்களில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருக்கிறார். அதற்காக அவர் விழா மேடையில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, "குடும்பத்தில் அண்ணன் தம்பிக்குள் சண்டை வராதா? வந்தாலும் பிறகு சேர மாட்டோமா? அதுபோல தம்பி ஸ்டீபன் ஒரு சூழ்நிலையில் அப்படி பேசியிருக்கலாம். அதையே நினைத்துக் கொண்டிருக்க முடியுமா? மன்னிக்கும் மனப்பான்மை வேண்டும். மன்னிக்கும் மனப்பான்மை இருந்தால் அந்த குடும்பம் சிறப்பாக இருக்கும் " என்று பேசினார்.

இந்த விழா மேடையில் எடப்பாடி பழனிசாமி கிட்டத்தட்ட 3 மணி நேரம் இருந்துள்ளார். ஆகவே, கிறிஸ்தவர்கள் மனம் குளிர்ந்து பாராட்டி வருகின்றனர்.