மக்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அனைவரும் கண்டு வியக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

லோக்கல் கவுன்சிலர் ஒருவரே பெரும் பந்தாவாக உலாவரும் வேளையில், தமிழக முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் எளிமை மக்களையும், அதிகாரிகளயும் மற்ற அரசியல்வாதிகளையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது


ஒரு சாதாரண கிளை கழகச் செயலாளரில் தொடங்கிய அவரது நீண்ட அரசியல் பயணம் முதலமைச்சர் பதவியில் வந்து முத்தாய்ப்பாக முழுமை பெற்றிருக்கிறது. எம்.பி, எம்.எல்.ஏ, அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ள எடப்பாடி, முதலமைச்சர் பொறுப்பில் 4வது ஆண்டில் வெற்றிகரமாக நடைபோடுகிறார்.

’தலைவர்களாக யாரும் பிறப்பதில்லை; காலமும் சூழலும்தான் அவர்களை உருவாக்குகின்றன’ என்கிற வரிகளுக்கு இலக்கணமாகத் திகழும் எடப்பாடியின் எளிமை எல்லோராலும் போற்றப்படுகிறது. தன்னையோ, தனது குடும்பத்தினரையோ முன்னிறுத்தாத அவரது நல்ல குணம் பலராலும் உற்று கவனிக்கப்படுகிறது.

‘முதல்வர் பதவி கிடைத்துவிட்டது. ஆட்டத்தை ஆரம்பிப்போம்’ என எண்ணாமல் இந்த பதவியை மக்களுக்கு சேவை செய்யும் ஒரு கருவியாகவே எடப்பாடி பயன்படுத்தி வருகிறார். இந்த வகையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நகலாகவே அவரை சொல்லலாம்’

எடப்பாடியின் இந்த எளிமையான அணுகுமுறைகள் பற்றி பலரிடமும் கருத்து கேட்டபோது,’’ தொடக்கத்தில் இவருக்கு இந்த பதவியா! என எடப்பாடியை கிண்டலடித்தவர்கள் தற்போது ஒரு மாபெரும் மக்கள் தலைவராக அவர் உருவாகி வருவதைப் பார்த்து வியப்படைந்து வருகிறார்கள். சில தலைவர்களை ஒருசிலருக்கு பிடிக்கும், மற்ற சிலருக்கு பிடிக்காது. ஆனால் எடப்பாடியை எல்லோருக்கும் பிடிப்பது ஆச்சரியமாக உள்ளது. ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர் என்கிற வித்தியாசங்கள் இன்றி எல்லாருமே அவரை கொண்டாடுகின்றனர். ஆய்வுப் பணிக்காக மாவட்டங்களுக்கு செல்லும்போது எடப்பாடியை பார்க்க தன்னிச்சையாக திரளும் கூட்டமே இதற்கு சாட்சி.

உயர்ந்த பதவியில் இருந்தாலும் அவர் மக்களில் ஒருவராகவே தன்னை அடையாளப்படுத்தி கொள்கிறார். இதன் காரணமாக எடப்பாடியை தங்களில் ஒருவராகவே மக்கள் கருதுகின்றனர். இந்த பரஸ்பர உணர்வுகள்தான் எடப்பாடியின் இன்றைய புகழுக்கு அடிப்படை காரணம்’என்கிறார்கள்.

சாதாரண பொதுமக்களும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இவரைக் கண்டு வியந்து பாராட்டி வருவதால், அடுத்த முதல்வரும் எடப்பாடிதான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.