டெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா?

அடுத்த மாதம் ஜெயலலிதா நினைவிடத்தை திறக்கும் நிகழ்ச்சியை மிகவும் பிரமாண்டமாக நடத்தவேண்டும் என்பதில் அ.தி.மு.க. உறுதியுடன் உள்ளது.


இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அங்கு கட்டப்பட்டு வரும் நினைவிட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்றதும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி வணங்கினார். அவருடன் இருந்தவர்களும் ஜெயலலிதா சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பிறகுகட்டுமானத்தைப் பார்வையிட்டார். 

சுமார் 50.80 கோடி செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில் இத்தாலி மார்பிள், பளிங்கு கற்கள் ஆகியவை பதிக்கப்பட்டு வருகின்றன. பீனிக்ஸ் பறவை வடிவத்தில் ஜெயலலிதா நினைவிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடம் விரைவில் அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

ஜெ. நினைவிட திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்கு பிரதமருக்கும் உள் துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் அழைப்பு விடுப்பதற்காகவே எடப்பாடி பழனிசாமி இந்த வாரம் டெல்லிக்குப் போகிறாராம்.