உங்க பலவீனம் எது? இதோ ராசிக்கேற்ற பலன்கள்!

ஒருவர் அனுபவிக்கும் எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்கும் அவருடைய ஜென்ம ராசி காரணமாக இருக்கும். அந்த வகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த விஷயத்தில் பலவீனமாக இருப்பார்கள் என்பது குறித்து இங்கு காண்போம்


மேஷம் : மேஷ ராசிக்காரர்கள் சாகசத்தை தேடி ஓடும் நபராக இருப்பார்கள். வேலை இல்லாமல் இருப்பதை வெறுப்பார்கள். இவர்களின் எதிர்பார்ப்புகள் அல்லது கனவுகளை, தங்களது துணைவர் பு+ர்த்தி செய்யவில்லை என்றால் அவர் மீது சலிப்பு ஏற்படும். 

ரிஷபம் : கடந்த காலத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதே இவர்களின் பலவீனம் ஆகும். வீணான செயல்களில் காலம் கடத்தி, அமைதியான வாழ்க்கையில் சலனத்தை உண்டாக்கிக் கொள்வார்கள். 

மிதுனம் : இவர்களது மனம் மாறிக் கொண்டே இருக்கும். ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் மீது தங்களது பார்வையை செலுத்துவது இவர்களுக்கு மிகக் கடினமாக இருக்கும். மனதை மாற்றிக் கொண்டே இருப்பதால் இவர்களின் உறவு பாதிக்கப்படும். 

கடகம் : இவர்கள் தங்களது துணையுடன் எப்போதும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். இதனால், தங்களது துணையுடன் இவர்களுக்கு பிரச்சனை ஏற்படும். 

சிம்மம் : தான் சொல்வது எல்லாம் தான் நடக்க வேண்டும் என்று நினைப்பதனால், இவர்களது உறவில் சிக்கல் எழும். மேலும், தன்னை சார்ந்தவர்கள் தங்களின் யோசனைப்படியே நடக்க வேண்டும் என்று நினைப்பதே இவர்களது பலவீனமாகும். 

கன்னி : கன்னி ராசிக்காரர்கள் சிறிய விஷயங்களுக்கும் மனமுடைந்து விடுவார்கள். எளிதில் கணிக்க முடியாததாக இவர்களது அணுகுமுறை இருக்கும். மேலும், இவர்களது எதிர்மறை குணத்தால் தங்களது துணைவரின் அதிருப்தியை பெறும் நிலை ஏற்படலாம். 

துலாம் : துலாம் ராசிக்காரர்கள் சில நேரங்களில் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவராக இருப்பார்கள். தங்களை யாராவது நகையாடினால் கூட மிகுந்த வேதனை அடைவார்கள். இதனாலேயே எப்போதும் தாம் தாக்கப்படுவதாகவே நினைத்துக் கொள்வார்கள். 

விருச்சகம் : மற்றவர்களிடம் விரைந்து பழக வேண்டும் என்று நினைக்கும் இவர்கள், யாரையும் தங்களிடம் நெருங்க விடமாட்டார்கள். இவர்களது துணைக்கு இவர்கள் கொடுக்கும் வாய்ப்பை, அவர்கள் பயன்படுத்தும் வரை காத்திருக்காமல் எரிச்சல் அடைவார்கள். 

தனுசு : தங்களது துணை தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு இல்லை என்று இவர்கள் நினைப்பதனால், உறவில் விரிசலை சந்திப்பார்கள். மேலும், நடக்க முடியாத செயல்களைக் நினைத்துக் கொண்டு, இன்றைய வாழ்க்கையை இழந்து கொண்டு இருப்பார்கள். 

மகரம் : மகர ராசிக்காரர்களுக்கு தங்களது உணர்வுகளை அடக்கத் தெரியாது. இவர்கள் வெளிப்படையாக இல்லாத காரணத்தால் இவர்களின் உறவில் சிக்கல்கள் ஏற்படும். 

கும்பம் : இவர்களின் அஜாக்கிரதையான குணத்தினால், உறவுகள் பாதிக்கப்படும். இவர்களுக்கு தங்களது நேசத்தை வெளியில் காட்டத் தெரியாது. 

மீனம் : இவர்களது கலகலப்பான குணம் அளவுக்கு அதிகமாக மாறும் போது குழப்பத்தை உண்டாக்கும். இதனால் ஏற்படும் கவனக்குறைவினால், இவர்களின் உறவிலும் விரிசல்கள் உண்டாகும்.