45 ரூபாய்க்காக 45 நிமிடம் தகராறு! டோல்கேட்டில் கம்யூனிஸ்ட் Ex எம்எல்ஏ அடாவடி! கரூர் பரபரப்பு!

கரூர் அருகேயுள்ள மணவாசி சுங்கச்சாவடியில் முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ பாலபாரதி சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த மறுத்துள்ளார். இதையடுத்து ஊழியர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தன்னை துப்பாக்கியை காட்டி சுங்கச்சாவடி ஊழியர்கள் மிரட்டுவதாக தவறான தகவலை பாலபாரதி பரப்பியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.


திருச்சியிலிருந்து ஈரோட்டிற்கு செல்லும் வழியில் மணவாசி சுங்கச்சாவடி நிலையம் அமைந்துள்ளது.இந்நிலையில் நேற்று அந்த வழியாக வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி மணவாசி சுங்கச்சாவடியை கடந்துள்ளார். அப்போது அவரது காரை நிறுத்தி சுங்கச்சாவடி கட்டணம் ரூபாய் 45 செலுத்துமாறு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு தான் முன்னாள் எம்எல்ஏ எனவும் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த தேவையில்லை எனவும் அமைச்சர் பாலபாரதி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தன்னிடம் இருந்த அடையாள அட்டையை காண்பித்துள்ளார். பின்னர் தன்னை இலவசமாக அனுமதிக்கும் படியும் ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர் தற்போது பதவியில் இருக்கும் எம்எல்ஏக்களுக்கு மட்டுமே சுங்கச்சாவடி கட்டணம் இலவசம் எனவும் முன்னால் எம்எல்ஏக்கள் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தி மட்டுமே செல்ல முடியும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து அமைச்சர் பாலபாரதி சுங்கச்சாவடி ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து இதற்கு முன்பு வந்த சுங்கச்சாவடிகளில் எல்லாம் கட்டணம் செலுத்தாமல் வந்துள்ளதாகவும் அங்கெல்லாம் தன்னை இலவசமாக அனுமதித்துள்ள நிலையில் நீங்கள் மட்டும் கட்டணம் கேட்பது ஏன் என்றும் பாலபாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.இதனை அடுத்து அங்கு வந்த மாயனூரை சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி சுங்கச் சாவடி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கட்டணம் செலுத்தாமலேயே பாலபாரதி கார் செல்ல ஏற்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் சுங்கச்சாவடி வேலை நேரம் முடிந்த பிறகு ஊழியர்கள் வசூலான தொகையை எடுத்துக்கொண்டு கிளம்பியுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு பாதுகாப்பாக வந்த துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் வந்துள்ளனர். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அமைச்சர் சுங்கச்சாவடி ஊழியர்கள் தன்னை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவர் பொய்யான தகவலை பறப்புவதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவர் பொய்யான தகவலை பரப்புவதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதை எடுத்து இதுகுறித்து பாலபாரதியிடம் கேட்டபோது அவர் விரைவில் விளக்கம் அளிப்பதாக கூறி சென்றுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 45 நிமிடங்கள் வரை சுங்கச்சாவடியில் பரபரப்பு நிலவியுள்ளது.