ரூ‌. 1000 கோடி செலவில் தலைவாசல் அருகே கால்நடை பூங்கா! 22ம் தேதி திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர்- கால்நடைத்துறை அமைச்சர் தகவல்!

சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் அருகே ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை பூங்காவை வருகிற பிப்ரவரி 22ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்துவைக்க உள்ளார் என கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் அருகே உள்ள வி.கூட்டு சாலையில் கடந்த வருடம் ரூபாய் 1000 கோடி செலவில் மிகப்பெரிய கால்நடை பூங்கா அமைக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கால்நடைப் பூங்காவின் கட்டமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற 22-ஆம் தேதி இந்த கால்நடை பூங்கா வை திறந்து வைக்க உள்ளார் என கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல் அளித்துள்ளார்.

கால்நடை பூங்காவின் கட்டுமான பணிகளை நேற்று பார்வையிட்ட கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.