ஜெ. பிறந்த நாளில் கேக் ஊட்டி தங்கள் ஒற்றுமையை காட்டிய இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க. தலைமையகத்தில் உள்ள ஜெயலலிதாவின் உருவச் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாளைக் குறிப்பிடும் வகையில் 73 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக் வெட்டப்பட்டது. இந்த கேக்கை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டனர். இந்த நிகழ்வு அ.தி.மு.க. தொண்டர்களுக்கு இடையில் நெகிழ்ச்சியை உருவாக்கியது. 

இருவரும் இப்படி ஒற்றுமையுடன் இருக்கும்போது அ.தி.மு.க.வின் வெற்றி குறித்து அச்சமே தேவையில்லை என்று சந்தோஷப்பட்டனர். இதையடுத்து நடந்த நிகழ்வில், நமது புரட்சித் தலைவி அம்மா என்னும் பெயரிலான சிறப்பு மலரை வெளியிட்டதுடன், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல், இலவச மருத்துவ முகாம் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தனர்.