60 நொடியில் 6 இட்லியை அடித்து குலைத்து விழுங்கிய 60 வயது பாட்டி! இட்லி சாப்பிடும் போட்டியில் சாம்பியன்!

இட்லி உண்ணும் போட்டியில் 1 நிமிடத்தில் 6 இட்லிகளை சாப்பிட்ட 60 வயது பெண்மணி முதல் பரிசை தட்டிச்சென்றுள்ளார்.


கர்நாடக மாநிலத்தில் தசரா பண்டிகையை முன்னிட்டு பல்வேறு விதமான விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மைசூர் பகுதியில் பெண்களுக்கு எட்டு வீதமாக இட்லி உண்ணும் போட்டி நடத்தப்பட்டது.

நீண்ட டேபிள் போடப்பட்டு போட்டியாளர்களுக்கு இட்லியும் சாம்பாரும் வழங்கப்பட்டது. போட்டியின் நேரம் அளவாக ஒரு நிமிடம் கடைபிடிக்கப்பட்டது. வயது வேறுபாடின்றி பெண்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக போட்டியாளர்கள் அனைவரும் மலக்கட்டு இட்லியை சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

இட்லி சாப்பிட இளைஞர்கள் திக்குமுக்காடி கொண்டிருந்த நிலையில், 60 வயது பெண்மணியான சரோஜம்மா ஒரு நிமிடத்தில் 6 இட்லிகளை சாப்பிட்டு அனைவரையும் வியக்க வைத்து முதல் பரிசை தட்டிச்சென்றார்.

இந்த சம்பவமானது மைசூர் பகுதியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்படுத்தியுள்ளது.