ஸ்டாலின் பேச்சைக் கேட்க மாட்டாராம் துர்கா..! வாயை பொத்தி சிரிக்கும் பா.ஜ.க!

இந்துத்துவா கொள்கையை உயிருள்ள வரை எதிர்ப்பேன் என்று ஸ்டாலின் போராடி வருகிறார். ஆனால், அவர் மனைவியோ ஊர் ஊராகப் போய் ஸ்டாலினுக்காக கடவுளை கும்பிட்டு வருவது சர்ச்சையாகி உள்ளது.


   காவிக் கும்பலை தமிழநாட்டில் இருந்து விரட்ட வேண்டும் என்று முழங்கிவரும் ஸ்டாலின், தன்னுடைய வீட்டிலும் ஒரு காவி ஆதரவாளர் இருப்பது தெரிந்தும் அமைதியாக இருப்பதுதான் வேடிக்கை என்று பா.ஜ.க.வினர் வாயைப் பொத்தி சிரிக்கிறார்கள். அவர்கள் சிரிப்பதிலும் அர்த்தம் இருக்கவே செய்கிறது.

   தன்னுடைய கட்சிக்காரர் இந்து அபிமானியாக இருந்தால் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் பிடிக்காது. உடனே எகத்தாளமாக எதையாவது பேசுவார்கள். கட்சியினர் வெளிப்படையாக காவி ஆதரவாளராக இருக்கக்கூடாது என்று கண்டிக்கவும் செய்வார்கள். ஆனால், வீட்டுக்குள் தயாளு, ராசாத்தி ஆகியோர் கோயில் கோயிலாக சுற்றுவதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அவருக்குத் தப்பாமல் வந்திருக்கிறார் ஸ்டாலின்.

   தமிழ்நாட்டில் பல்வேறு கோயிலுக்கும் துர்கா சென்றுவருவது கடுமையான சர்ச்சையைக் கிளப்பியது. அதனை பெண் சுதந்திரம், அதில் நாங்கள் எப்படி தலையிட முடியும் என்ற ரீதியில் சமாளித்து வந்தனர். தமிழகத்தில் கோயில் கோயிலாகப் போய் ஸ்டாலினுக்காக பூஜை செய்தால், அது பட்டவ்ர்த்தனமாக வெளியே வந்துவிடுகிறது என்பதால் இப்போது வட நாட்டுக்குப் படை எடுத்திருக்கிறார் துர்கா.

   சமீபத்தில் வாரணாசிக்குப் போயிருக்கும் துர்கா, அங்கு ஸ்டாலினுக்காக சிறப்பு பூஜை நடத்தினாராம். தீச்சட்டி எடுத்த  நிர்வாகியை, கட்சியில் இருந்து நீக்கிய சம்பவம் எல்லாம் தி.மு.க.வில் நடந்திருக்கிறது. இப்போது தி.மு.க. தலைவருக்காக கோயில் கோயிலாக ஏறி இறங்கும் துர்கா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் ஸ்டாலின் என்று பா.ஜ.க.வினர் கேள்வி எழுப்புகிறார்கள்.

   ஸ்டாலின் கொள்கையை துர்கா மதிப்பதில்லை, ஸ்டாலின் பேச்சை அவர் கேட்பதில்லை  என்பதெல்லாம்  உண்மை என்றாலும், அரசியலில் இல்லாத குடும்பத் தலைவிகளை பற்றி எழுதுவ்து சரியில்லை என்று தி.மு.க.வினர் பொங்காமல் இருந்தால் சரிதான்.