திருமணமாகியும் குழந்தை இல்லை..! கணவன் செய்த டார்ச்சர்..! 32 வயது மனைவி எடுத்த பதைபதைக்க வைக்கும் முடிவு! என்னாச்சு தெரியுமா?

ஹைதராபாத்தில் திருமணமாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் பெண் ஒருவருக்கு குழந்தை பிறக்காததால் அவரது கணவர் டார்ச்சர் செய்து வந்ததை அடுத்து அந்தப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


ஐதராபாத்தை சேர்ந்த லாவண்யா (வயது 32) என்ற பெண் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். தற்போது நிலவிவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே இருந்திருக்கிறார். லாவண்யா கடந்த 2012 ஆம் ஆண்டு ஆந்திராவை சேர்ந்த விமானி ஆக பணியாற்றி வரும் வெங்கடேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். இந்த தம்பதியினர் ஷம்ஷாபாத்தில் வசித்து வந்துள்ளனர். திருமணமாகி பல ஆண்டுகள் ஆன நிலையிலும் இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை.

ஆகையால் அவரது கணவரும் கணவரின் குடும்பத்தாரும் தொடர்ந்து அந்த பெண்ணை துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால் அந்தப் பெண் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்தும் அவரது கணவர் வெங்கடேஷ் லாவண்யாவை தொடர்ச்சியாக மனதளவிலும் உடலளவிலும் துன்புறுத்தி இருக்கிறார். இதனால் மனமுடைந்த லாவண்யா தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து இருக்கிறார். இதனைத்தொடர்ந்து லாவண்யா பேஸ்புக்கில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். 

அதாவது அவர் வெளியிட்டிருந்த இந்த வீடியோ பதிவில், தன்னுடைய கணவர் செய்யும் சித்திரவதைகளை தன்னால் தாங்கிக்கொள்ள இயலாது ஆகையால் இத்துடன் என்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்று கூறி கதறி அழுதிருக்கிறார். லாவண்யா வெளியிட்டிருந்த இந்த பதிவை பார்த்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடனடியாக கணவர் மற்றும் அவரது பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த அவர்கள் உடனடியாக லாவண்யாவின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக இருந்திருக்கிறார். இதனை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் தகவல் அறிந்து வந்த போலீசார் லாவண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் லாவண்யாவின் வீட்டை சோதனை செய்தபோது அங்கு அவர் கடைசியாக தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக எழுதிய கடிதம் ஒன்றும் கிடைத்துள்ளது. அதிலும் தன்னுடைய கணவரும் அவரது குடும்பத்தினரும் இணைந்து குழந்தை இல்லாத காரணத்தை கூறி தொடர்ந்து மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் டார்ச்சர் செய்து வந்ததை குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். குழந்தை இல்லாததை காரணமாகக் காட்டி வேறு ஒரு பெண்ணுடன் தனது கணவர் வெங்கடேஷ் தொடர்பில் இருந்து வந்ததாகவும் அவர் அந்த கடிதத்தில் எழுதி இருக்கிறார். இதனை கண்டுபிடித்த போலீசார் இதனடிப்படையில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோரிடம் கேட்டபொழுது, தன்னுடைய மகளை சித்திரவதை செய்து கொலை செய்த வெங்கடேசன் தூக்கில் போட வேண்டும் என்று கதறி அழுது இருக்கின்றனர். தற்போது இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.