எல்லாருக்கும் லீவ் தான்..! ஆனால் நாம் வீட்ல இருக்க முடியுமா? தினமும் 12கிமீ நடந்தே வேலைக்கு போகும் அந்தோனி!

ஊரடங்கு உத்தரவால் எல்லோரும் வீட்டில் முடங்கிக் கிடக்கும் வேளையில் வயது முதிர்ந்த அந்தோணி என்பவர் தினமும் 12 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தன்னுடைய காவலாளி பணியை சிறப்பாக செய்து வரும் சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.


உலகையே அச்சுறுத்தி வரும் ஒன்றாக கொரோனா வைரஸ் இருந்து வருகிறது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் ஆரம்பித்த இந்த வைரஸ் தொற்று தற்போது உலகமெங்கும் பரவி தன்னுடைய கோர தாண்டவத்தை காட்டி வருகிறது. இந்த வைரஸ் தொற்று நோய் நம்மை பாதுகாத்துக்கொள்ள மத்திய அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் நிலை குலைந்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து வசதி இல்லாமல் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவையடுத்து பல தொழிற்சாலைகள் நிறுவனங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.

மருத்துவமனைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் நிலையங்கள் ஆகியவை தினமும் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் சென்னை மேடவாக்கத்தில் காவலாளியாக பணிபுரியும் அந்தோணி என்பவர் தினம் தோறும் சுமார் 12 கிலோ மீட்டருக்கும் மேலாக நடந்து சென்று பணி புரிந்து வருவது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

66 வயதாகும் அந்தோனி காலையில் ஆறு கிலோமீட்டர் மாலையில் ஆறு கிலோமீட்டர் நடந்து சென்று பணிபுரிகிறார். ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் அவரின் தினம்தோறும் நடந்து சென்று தன் வேலையை பார்த்து வருகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது தன்னிடம் சைக்கிள் மற்றும் மோட்டார் வண்டி ஆகியவை இல்லாத காரணத்தால் நடந்து சென்று தன் காவலாளி வேலையை பார்த்து வருவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் பேசிய அவர் தன்னுடன் தங்கி பணியாற்றும் பலரும் சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும் கூறி இருக்கிறார். குறிப்பாக வெளியூர்களில் இருந்து வந்து இங்கு தங்கி வேலை பார்க்கும் நபர்கள் உணவுக்காக பெரிதாக அவஸ்தைப்படுகிறார்கள் எனவும் கூறியது மனதிற்கு வேதனை அளித்தது. ஊரடங்கு உத்தரவால் எல்லோரும் விடுமுறையில் வீடுகளில் இருக்கும் இந்த சமயத்தில் இந்த காவலாளி தொழில் செய்யும் அந்தோணி போல் பல பேர் வெளியில் கஷ்டப்பட்டு வருகின்றனர் என்பது மனதை நெகிழவைக்கும் ஒன்றாக இருக்கிறது.