11 வயது மகளை சவூதி இளவரசருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி! மன்னரின் 6வது மனைவி கூறிய உலகை உலுக்கிய புகார்!

11 மகளை சவுதி இளவரசருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதாக மனைவி தொடர்ந்த வழக்கில் துபாய் மன்னர் ஷேக்முகமதுவுக்கு எதிராக லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.


கருத்து வேறுபாடு காரணமாக துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ராஷித் அல் மகோடமும் அவருடைய 6வது மனைவி ஹாயா பின்ல் அல் ஹுசைனும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். மேலும் விவகாரத்து வேண்டுமேன்று கேட்டு வந்த ஹயா கடந்த வருடம் தனது 2 பெண் குழந்தைகளுடன் மாயம் ஆனார். இந்நிலையில் லண்டனில் வசிக்கும் ஹயா தனது கணவரான துபாய் மன்னருக்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

தனது மனுவில் கணவரால் தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்த ஹயா தன்னுடைய 11 வயது மகளை துபாய் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு மணமுடிக்க திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். 8 மாதங்களாக வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக உத்தரவிட்டுள்ளது.

ஹாயா மற்றும் அவரின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம் கடத்தல், சித்ரவதை, அச்சுறுத்தல் போன்ற மன்னர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் உறுதி செய்து அவருக்கு எதிராக உத்தரவு பிறப்பித்துள்ளது. மன்னருக்கு எதிராகவே தீர்ப்பு வந்துள்ளதால் துபாயின் வர்த்தகம் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சவுதி இளவரசர் மீதான குற்றச்சாட்டு குறித்து இதுவரை அந்நாட்டு அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.