மண்ணுக்குள் தோண்ட தோண்ட வண்டி வண்டியாக சரக்கு பாட்டில்..! சிக்கிய குவாட்டர் கோவிந்தன்..! எங்கு தெரியுமா?

காட்டுப்பகுதிக்குள் குழி தோண்டி மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை புதைத்து வைத்துள்ள சம்பவமானது தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 76,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 13,50,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியா முழுவதிலும் 4863 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 352 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 130 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சென்ற மாதம் 24-ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதிலும் முழு ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிறப்பித்தார்.

அனைத்து மாநில முதல்வர்களும் இந்த முழு ஊரடங்கு உத்தரவை முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமென்றும் முதலமைச்சர்களுக்கு பிரதமர் வலியுறுத்தினார். அனைத்து மாநிலங்களிலும் மதுக்கடைகள் இந்த 21 நாட்களில் மூடப்பட்டன. 

இந்நிலையில், இந்த உத்தரவினால் மதுப்பிரியர்கள் மது கிடைக்காத விரக்தியில் வாழ்ந்து வருகின்றனர். சிலர் மூடப்பட்டுள்ள கடைகளிலிருந்து மதுபாட்டில்களை திருடி மறைமுகமாக விற்று வருவதாக கூறப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டிக்கு அருகே அமைந்துள்ள நாலாபுதூர் என்னும் பகுதியில் சாலையோரத்தில் குழிதோண்டி மது பாட்டில்கள் புதைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்தன. 

தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபரை கையும் களவுமாக பிடித்தனர்‌. அப்போது அந்த நபர் புதைக்கப்பட்டிருந்த குழியிலிருந்து மதுபாட்டில்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே எடுத்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.