மதுபோதை! பட்டப்பகல்! பாலத்தில் முகம் சுழிக்க வைத்த காதல் ஜோடிக்கு பிறகு நேர்ந்த விபரீதம்! வைரல் புகைப்படம்!

பாலத்தின் விளிம்பிலிருந்து காதல் ஜோடியொன்று கீழே தவறி விழுந்த சம்பவமானது பெரு நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேபெத் எஸ்பினாஸ் மற்றும் ஹெக்ட்டார் விடால் ஆகியோர் பெரு நாட்டில் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இவ்விருவரும் சாகசங்கள் செய்வதில் வல்லவர்கள். சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக இருக்க விரும்பி சமீபத்தில் பெரு நாட்டிற்கு இடம்பெயர்ந்தனர். நேற்று இரவு இரவு விடுதிக்கு சென்று குத்தாட்டம் போட்டு விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இருவரும் மதுஅருந்தி இருந்தனர். 

இந்நிலையில் பெத்தலஹேம் மேம்பாலத்தில் நடந்து கொண்டிருந்தனர். அப்போது போதை தலைக்கேறிய காரணத்தினால் கைப்பிடியின் விளிம்பில் சாய்ந்து இருவரும் முத்தமிட்டுக்கொண்டிருந்தனர். கைப்பிடியின் மேல் மேபெத் அமர்ந்திருந்தார்.  சுயநினைவை இழந்த அவர் ஹெக்டரை சுற்றி வளைத்துக்கொண்டு முத்தமிடத்தொடங்கினார். 

ஹெக்டார் உறுதியாக நிற்காத காரணத்தினால் மேபத்தின் மீது சாய்ந்து உள்ளார். மேபத்தும் போதையில் இருந்ததால் நிலை தடுமாறியுள்ளார். 50 அடி உயரமான பாலத்திலிருந்து இருவரும் எதிர்பாராவிதமாக விழுந்துள்ளனர்.

கீழே விழுந்தவுடன் சம்பவ இடத்திலேயே மேபத் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அவருடைய காதலரை சம்பவத்தை கண்ட பொதுமக்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சில மணி நேரத்திலேயே அவரும் இறந்துவிட்டார். இந்த சம்பவமானது பெரு நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.