நள்ளிரவில் நர்ஸ் மீது பாய்ந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர்! பதற வைக்கும் சம்பவம்!

குடிபோதையில் உடன்பணியாற்றும் செவிலியரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை காவல்துறையினர் வலைவீசி தேடி வரும் சம்பவமானது தெற்கூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கீழ்நத்ததில் தெற்கூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு அரசு மருத்துவமனையில் மாரியப்பன் என்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணியாற்றி வருகிறார். இவர் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஆம்புலன்சில் மாரியப்பனும் மற்றும் அந்த செவிலியரும் பணியாற்றி வந்தனர்.

அப்போது குடிபோதையில் இருந்த மாரியப்பன் செவிலியரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். அதனை தடுக்க போராடிய செவிலியர் ஒரு கட்டத்திற்கு பிறகு கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை வரவழைத்தார்.

இதனால் பயந்த மாரியப்பன் அந்த பகுதியில் இருந்து வேகமாக தப்பித்து சென்றார். அலறல் சத்தம் கேட்டு திரண்ட பொதுமக்கள் செவிலியரை காப்பாற்றினர். பின்னர் சங்கரன்கோவில் காவல்நிலையத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மாரியப்பன் மீது செவிலியர் புகார் அளித்தார். 

செவிலியரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மாரியப்பன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்‌.