65 வயசு பாஜக தலைவருடன் கள்ளக்காதல்! 22 வயசு பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

நடிகர் கமலின் பாபநாசம் பட பாணியில் தனது இளம் கள்ளக்காதலியை கொலை செய்து புதைத்த பா.ஜ.க தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படம் தமிழில் பாபாநாசம் என்ற பெயரில் வெளியானது. மலையாளத்தில் மோகன் லால் நடித்த வேடத்தில் தமிழில் கமல் நடித்திருப்பார். இதே படம் இந்தியிலும் த்ரிஷ்ம் என்ற பெயரிலேயே எடுக்கப்பட்டுள்ளது. அங்கு மோகன் லால், கமல் வேடத்தில் அஜய் தேவ்கன் நடித்திருப்பார்.

   இந்த படங்களில் ஹீரோ ஒரு கொலையை செய்துவிட்டு எப்படி மறைப்பது என்பதை மிகவும் புத்திசாலித்தனமாக இயக்குனர் கையாண்டிருப்பார். ஒருவனை கொலை செய்து புதைத்துவிட்டு போலீசாரின் கவனத்தை திசை திருப்பும் வகையில் காட்சிகள் இடம் பெற்று இருக்கும். இதே பாணியில் மத்திய பிரதேசத்தில் தனது கள்ளக் காதலியை கொலை செய்து புதைத்த பா.ஜ.க தலைவர் 2 ஆண்டுகளுக்கு பின்னர் சிக்கியுள்ளார்.

  இந்தூர் பங்கங்கா பகுதியை சேர்ந்தவர் 22 வயதே ஆன ட்விங்கிள் டாக்ரே. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பா.ஜ.க தலைவர் ஜகதீஸ் கரோட்டியாவுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. 65 வயதான ஜக்தீஸ் கரோட்டியா 22 வயது இளம் பெண்ணுடன் சேர்ந்து சுற்றுவதை அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை.

   இதே போல் ஜக்தீசுடன் இளம் பெண் டாக்ரே கள்ள உறவு வைத்திருப்பது அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அந்த பெண்ணை வீட்டில் இருந்து விரட்டியுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டை விட்டு விரட்டப்பட்ட டாக்ரே பிறகு மாயமானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

   இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் டாக்ரே கொலை செய்யப்பட்டதாக கூறி போலீசார் பா.ஜ.க தலைவர் ஜக்தீஷ் அவரது இரண்டு மகன்கள் மற்றும் கொலைக்கு உதவிய மேலும் இரண்டு பேர் என மொத்தம் 5 பேரை கைது செய்துள்ளனர். கடந்த 2 வருடத்திற்கு முன்பு வீட்டை விட்டு விரட்டப்பட்டடாக்ரே நேராக ஜக்தீஷ் வீட்டுக்கு சென்றுள்ளார்.

  தன்னை வீட்டை விட்டு விரட்டியதால் உங்களுடனேயே வைத்துக் கொள்ளுங்கள் என டாக்ரே, ஜக்தீசை மிரட்டியுள்ளார். இல்லை என்றால் இருவருக்கும் இடையிலான கள்ள உறவை போலீசாரிடம் கூற வேண்டியதிருக்கும் என்று டாக்ரே மிரட்டியுள்ளார். இதனால் குடும்ப கவுரவம் பாதிக்கப்படும் என்று கருதிய பா.ஜ.க தலைவர் ஜக்தீஷ் தனது இரண்டு மகன்கள் மற்றும் மேலும் இரண்டு பேருடன் சேர்ந்து டாக்ரேவை அடித்து கொலை செய்துள்ளார்.

   பின்னர் த்ரிஷ்யம் பட பாணியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை புதைத்துள்ளனர். மேலும் சில அடி தொலைவில் நாய் ஒன்றை கொலை செய்து அதனையும் புதைத்துள்ளனர். பின்னர் இவர்களே த்ரிஷ்யம் பட பாணியில் பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக நாய் புதைக்கப்பட்ட இடத்தை சுட்டிக்காட்டி தகவல்களை பரப்பினர்.

   இந்த தகவல் பரவியதை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று அங்கு தோண்டி பார்த்த போது நாயின் உடல் இருந்துள்ளது. இதன் பிறகு டோக்ரே உடல் குறித்து தகவல் வெளியானாலும் போலீசார் நம்பமாட்டார்கள் என்று ஜக்தீஷ் கருதியுள்ளார். அவர் கருதியது போலவே இரண்டு ஆண்டுகளாக டாக்ரேவை பற்றி யாரும் கவலைப்படவில்லை. இந்த நிலையில் பெண்ணின் பிரேஸ்லட் ஒன்று கிடைக்க, அது டோக்ரேவினுடையத என்று அவரத உறவினர்கள் கூறியுள்ளனர்.

   இதனை தொடர்ந்து பிரேஸ்லட் கிடைத்த இடத்திற்கு அருகே தோண்டப்பட்ட போது டோக்ரே உடல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து கொலை வழக்கில் பா.ஜ.க தலைவர் ஜக்தீஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையாளிகள் கொலை செய்த பிறகு த்ரிஷ்யம் படத்தை பார்த்து உடலை மறைக்க திட்டமிட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.