பொள்ளாச்சியில் பெண்களைப் பார்த்தாலே அனைவருக்கும் சந்தேகம் வருவதாகவும் பெற்ற தந்தை கூட தனது மகளை சந்தேகத்துடன் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக நடிகர் கருணாஸ் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி பெண்களைப் பார்த்தாலே சந்தேகம் வருகிறது! கருணாஸ் பேட்டியால் கொதிக்கும் மாதர் சங்கம்!
சென்னையில் நடிகர் கருணாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது. பொள்ளாச்சி விவகாரம் மிகவும் மோசமான ஒன்று. பொள்ளாச்சி விவகாரத்தை தேவையில்லாமல் தற்போது அரசியலாக்கி விட்டார்கள்.
பொள்ளாச்சி விவகாரத்திற்கும் ஸ்டாலின் மருமகன் சபரீசன் எனக்கும் என்ன தொடர்பு? பொள்ளாச்சி ஜெயராமன் என் மகனுக்கு இந்த விஷயத்தில் ஏதும் தொடர்பும் இல்லை என்றால் எங்களுக்கு இதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறி விட்டுப் போக வேண்டியது தானே? எதற்காக தேவையில்லாமல் சபரீசன் மீது பொள்ளாச்சி ஜெயராமன் புகார் அளிக்க வேண்டும்?
பொள்ளாச்சி விவகாரம் அரசியலாக்கப்பட்டு உள்ளதால் தற்போது பொள்ளாச்சியில் உள்ள பெண்கள் அனைவரையுமே சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் ஒரு நிலை இருக்கிறது. பொள்ளாச்சியில் பெற்ற தந்தை தன் மகளை சந்தேகத்தோடு பார்க்கிறார். சகோதரன் தனது தங்கையோ தனது அக்காவையோ சந்தேகத்தோடு பார்க்கிறான்.
இப்படி ஒரு நிலை ஏற்பட்டதற்கு அரசியல்வாதிகள் தான் காரணம். கருணாஸ் இந்த விவகாரத்தில் பொள்ளாச்சி பெண்கள் மீது அவதூறு செலுத்தி விட்டதாக புகார் எழுந்துள்ளது. கருணாவின் பேட்டியை பார்த்து மாதர் சங்கங்கள் கொந்தளித்துப் போய் உள்ளனர். விரைவில் கருணாசுக்கு எதிராக போராட்டம் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இதற்கிடையே தான் பொள்ளாச்சி பெண்களைக் கேவலப் படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் அவ்வாறு கூறவில்லை என்றும் பொள்ளாச்சியில் இருக்கும் நிலவரத்திற்கு காரணம் அரசியல்வாதிகள் தான் என்று தெரிவிக்கவே அப்படி கூறியதாக கருணாஸ் விளக்கம் அளித்துள்ளார்.