திடீரென பூட்டிய நகைக் கடையின் பிரமாண்ட கதவு! ஆண் ஊழியர்களுடன் இரவில் கடைக்குள் சிக்கிய பெண் ஊழியர்கள்..!

தனிஷ்க் நகைக்கடையில் தானியங்கி பூட்டு பழுதானதால் ஊழியர்கள் உள்ளே சிக்கிக்கொண்ட சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியது.


செம்பாக்கம் பகுதியில் தனிஷ்க் நகை கடை அமைந்துள்ளது. வழக்கம்போல 10 மணி அளவில் கடையை அடைத்து கொண்டிருந்தபோது ஷட்டர் பாதியளவு மூடி இருந்தது. திடீரென்று 30 அடி உயரத்திலிருந்து ஷட்டர் கிடுகிடுவென இறங்கியதால் தானியங்கி பூட்டு தானாக பூட்டிக்கொண்டது.

கிடுகிடுவென இறங்கி பூட்டி கொண்டதால் தானியங்கி கதவின் பூட்டு பழுதடைந்துள்ளது. அப்போது உள்ளே மேலாளர்களும், ஊழியர்களும் சிக்கி கொண்டனர். பூட்டு பழுதானதால் சாவியை உபயோகித்து ஷட்டரை திறக்க இயலவில்லை. உள்ளே சிக்கிக் கொண்ட ஊழியர்களை காப்பாற்றுவதற்காக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவலறிந்தவுடன் விரைந்து வந்த காவல்துறையினர், கட்டிங் மெஷின் மூலம் சட்டையை அறுத்து உள்ளே இருந்த ஊழியர்களை காப்பாற்றினர். தற்போதுவரை காவல்துறையினர் அங்கு வளர்த்தார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.