ஒரு போட்டில தோத்தா நாங்க என்ன சொம்பையா? ஜடேஜா செம டென்சன்!

நடந்து முடிந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி படு தோல்வி அடைந்தது.


முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அணைத்து விக்கெட்களையும் இழந்து 179 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய நியூஸிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணியை பொறுத்தவரை ரவீந்திர ஜடேஜா மட்டும் 54 ரன்களை எடுத்தார். பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.

நேற்றைய போட்டியில் சொல்லப்போனால் ஜடேஜாவை தவிர வேறு யாரும் சிறப்பாக செயல்படவில்லை. போட்டிக்கு பிறகு பேட்டி அளித்த ஜடேஜா , இது எங்களுடைய முதல் போட்டி. இந்த ஒரு போட்டியை வைத்து இந்திய அணியையும் , வீரர்களையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர்.

ஆகவே இங்கிலாந்து மைதானத்தின் தன்மை உணர்ந்து அதற்கேற்றாற்போல விரைவில் நாங்கள் செயல்படுவோம். இந்தியாவிலிருந்து வந்து இங்கிலாந்த்து மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப புரிந்து கொண்டு ஆடுவது எளிதல்ல. மைதானத்தின் தன்மையை உணர்ந்து விளையாட எங்களுக்கு போதிய நேரம் இன்னமும் உள்ளது. ஆகவே இந்திய அணி ஒரு போட்டியில் தோற்றதை வைத்து குறைத்து மதிப்பிடவேண்டாம் எனவும் ஜடேஜா கூறியுள்ளார்.