ஆஸ்துமா, இருமல், மஞ்சள் காமாலை, உடல் சோர்வு தீர கழுதைப் பால்! வெறும் 50மில்லி 50 ரூபாய்! தஞ்சையை கலக்கும் புது வியாபாரம்!

தஞ்சையில் 50 ரூபாய்க்கு 50 மில்லி கழுதைப் பால் விற்பனை செய்யும் தொழில் ஆரம்பம் ஆகி உள்ளது. பொதுமக்கள் பலரும் அதற்கு வரவேற்பு அளித்து வாங்கிக் குடிக்கின்றனர்.


பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சில குடும்பங்கள் தஞ்சையில் கழுதைகளுடன் தங்கியுள்ளனர். பகல் நேரங்களில் கழுதைகளை மேய்ச்சலுக்கு விடுகின்றனர். தினமும் காலை, மாலையில் ஒவ்வொருவரும் ஒரு கழுதை அழைத்துக்கொண்டு தெரு தெருவாக சென்று கழுதைப் பால், கழுதைப் பால் என என கூவிக் கொண்டே விற்கின்றனர். கழுதைப் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளையும் சொல்லிக் கொண்டே செல்கின்றனர்.

கழுதைப் பால் குடித்தால் உடலில் உள்ள பெரும்பாலான நோய்கள் நீங்கும். கைக்குழந்தை முதல் முதியவர் வரை கழுதை பால் குடிக்கலாம் எனக் கூறுகின்றனர். இதைக் கேட்கும் பொதுமக்கள் கழுதைப் பாலை வாங்கிக் குடித்துவிட்டு, குழந்தைகளுக்கும் கொடுக்கின்றனர். கழுதைப் பால் அப்பகுதியில் அமோக விற்பனையாகி வருகிறது. இதை விற்பவர் கூறும்போது, பரம்பரை பரம்பரையாக கழுதை வளர்த்து அதன் பாலை விற்பதுதான் தொழில்.

தமிழகத்தின் ஒவ்வொரு ஊருக்கும் சென்று அங்கேயே ஒரு மாதம் வரை தங்கி கழுதைப் பாலை விற்பது வழக்கம். இந்த வருமானத்தை வைத்துதான் வாழ்கை நடத்துகிறோம். கழுதைப் பாலை வெறும் வயிற்றில் குடித்தால் ஆஸ்துமா, இருமல், பல விதமான தோல் நோய், மஞ்சள் காமாலை, ரத்த சோகை, உடல் சோர்வு உள்ளிட்ட பல நோய்கள் தாக்கியிருந்தால் அவை உடனே குணமாகி விடும் என்கிறார். அனைவரும் இதை பருகினால் எந்த நோயும் அண்டாது.

50 மில்லி கழுதைப் பால் 50 ரூபாய்க்கு விற்கிறோம். கழுதைப் பாலில் பல நன்மைகள் இருப்பதால் பசும் பாலைவிட விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என வாங்கிக் குடிக்கின்றனர். ஆனால் மருத்துவர்களோ கழுதைப் பால் குடித்தால் நோய்கள் தீரும் என்பது மூடநம்பிக்கை. குழந்தைகளுக்கு ஒரு வருடத்துக்குப் பிறகுதான் பசும்பாலே கொடுக்கப்படுகிறது. கட்டாயமாக குழந்தைகளுக்கு கழுதைப் பாலை கொடுக்கக் கூடாது என்கின்றனர்.