மனித ஆற்றலின் உச்சம்..! இந்திய டீன் ஏஜ் பெண் ஜோதியை பாராட்டிய டிரம்ப் மகள்..! ஏன் தெரியுமா?

நடக்கமுடியாத தன்னுடைய தந்தையை சைக்கிளில் வைத்து இயக்கி சுமார் 1200 கிலோமீட்டர் வரை அழைத்துச் சென்ற 15 வயது சிறுமியான ஜோதியை பாராட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகள் புகழாரம் சூட்டியிருக்கிறார்.


சமீப நாட்களாகவே 15 வயது சிறுமி ஜோதிகுமாரி தன்னுடைய நடக்க முடியாத தந்தையை சைக்கிளில் வைத்து 1200 கிலோ மீட்டர் தூரத்தை 7நாட்களில் கடந்த சம்பவம் பெரிதாகப் பேசப்பட்டு வந்தது. இதன் உச்சகட்டமாக இந்தச் செய்தியின் எதிரொலி அமெரிக்கா அவரை தாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பலரும் உணவின்றி பட்டினியாக வாழ்ந்து வருகின்றனர். அப்படியாக சிறுமி ஜோதி குமாரி என்பவர் தன்னுடைய தந்தையை சைக்கிளில் அமரவைத்து மிதித்து தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றிருக்கிறார். 

சிறுமி ஜோதி குமாரி, தன் தந்தையுடன் டெல்லிக்கு அருகில் உள்ள குர்கான் என்ற இடத்தில் வசித்து வந்துள்ளார். நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் இவர்கள் அன்றாட உணவிற்கு அதிகமாக கஷ்டப்பட்டு வந்துள்ளனர். இதனையடுத்து பீகாருக்கு அருகில் உள்ள தங்களுடைய சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்று தந்தையும் மகளும் முடிவு செய்துள்ளனர். ஜோதி தனது தந்தையுடன் மிதிவண்டியில் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எந்த வேலையும் இல்லை, பணமும் இல்லை, வீட்டின் உரிமையாளர் அவர்களை வெளியே எறிவேன் என்று மிரட்டியதால், தந்தை-மகள் இருவரும் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். துரதிஷ்டவசமாக ஜோதியின் தந்தைக்கு காலில் ஏற்பட்ட காயத்தால் நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த ஏழு நாட்களாக 1200 கிலோ மீட்டர் தூரம் அந்த சிறுமி தன் தந்தையை வைத்து சைக்கிளை மிதித்து சென்றிருக்கிறார். இதில் அவர்கள் சென்ற ஏழு நாட்களில் இரண்டு நாட்கள் ஒருவேளை உணவு கூட இன்றி அவர்கள் பசியோடு சென்றுள்ளனர். இறுதியில் வெற்றிகரமாக 7 நாட்களின் பயணத்திற்குப் பின்பு அவர்கள் பீகாரில் உள்ள தங்களது கிராமத்திற்கு அருகில் சென்று உள்ளனர். அங்கு அவர்கள் நடந்ததைப் பற்றி கூறியுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு உள்ளது. 

இன்னிலையில் ஜோதிகுமாரி தன்னுடைய கால் நடக்க முடியாது தந்தையை 1200 கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிள் வைத்து அழைத்து சென்றதை இணையத்தின் வாயிலாக அறிந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவங்கா டிரம்ப் ஜோதியின் சகிப்புத்தன்மையையும் அன்பையும் பார்த்து நெகிழ்ச்சி அடைந்து அவரைப் பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். தற்போது இவங்கா டிரம்பின் இந்த பதிவானது சமூகவலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.