சென்னையில் 2000 கிலோ நாய்க்கறி! ஸ்டார் ஓட்டல்களுக்கு கொண்டு சென்ற போது சிக்கியது!

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்துசென்னை எழும்பூருக்கு வந்தரயிலில் இரண்டாயிரம் கிலோநாய்க்கறி சிக்கியுள்ளது


   ஜோத்பூரில் இருந்து சென்னை வரும் ரயிலில் பதப்படுத்தப்படாத ஆட்டுக்கறி அனுப்பப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

   இதனை தொடர்ந்து  இன்று காலை எழும்பூர் ரயில்நிலையத்துக்கு வந்த ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளும், சென்னை மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகளும்  திடீர் சோதனை மேற்கொண்டனர்.

   ஆய்வின் போது ரயிலின் சரக்குப்பெட்டியில் இருந்த 20 பார்சல்களள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. பார்சல்களை திறந்து பார்த்த போது அவற்றில் இறைச்சிஇருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஐஸ் கட்டியில் வைத்து கெட்டுப்போகாமல் இருக்கும் வகையில் கொண்டு வரப்பட்டிருந்த இறைச்சிகள் எந்த விலங்கின் இறைச்சி என்று அதிகாரிகள் சோதனை செய்தனர்.

   சோதனை முடிவில் அதிகாரிகள் அதிர்ச்சி அடையும் வகையில் முடிவு கிடைத்தது. ஆட்டு இறைச்சி என்று கூறப்பட்டு கொண்டுவரப்பட்ட இறைச்சிகள் உண்மையில் நாய்க்கறி என்பதை கண்டு பிடித்து அதிகாரிகள் அதிர்ந்து போயினர். இறைச்சியை ஆய்வு செய்தசென்னை மாநகராட்சிசுகாதாரப்பிரிவு கால்நடைமருத்துவர்கள் அந்த இறைச்சியின்தன்மைஎலும்புகளின் அமைப்புஆகியவற்றைக் கொண்டுநாய்க்கறிகள் என்பதை  உறுதி செய்தனர்.

ஏற்கனவே சென்னை நட்சத்திர ஓட்டல்களுக்கு இதே போன்ற நாய்கறி கொண்டுவரப்பட்ட போது சிக்கி பிரச்சனை ஆனது. அதன் பிறகு அந்த விவகாரம் அப்படியே அமுங்கிப்போனது. இந்த நிலையில் மீண்டும் ராஜஸ்தானில் இருந்து நாய்கறி வந்துள்ளது. இந்த முறையும் நட்சத்திர ஓட்டல்களுக்குத்தான் நாய்கறி கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். நட்சத்திர ஓட்டல்களில் செம்மறி ஆட்டுக்கறி என்று கூறி நாய்க்கறிகள் தான் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

   அதே சமயம் நட்சத்திர ஓட்டல்களில் நாய்க்கறி என்பதை மறைத்து செம்மறி ஆட்டுக்கறி என்று வியாபாரிகள் விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

••••••••••